உஸ்தாத் மன்சூர்,, அக்குரனை ஜம்இய்யதுல் உலமா முறுகல் தொடர்பில் எனது ஆதங்கம்
-உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்-
உஸ்தாத் மன்சூரையும் அக்குரனை ஜம்இய்யதுல் உலமாவையும் மதிப்பவன் நான். தஃவாக் களத்தில் இரு தரப்பினரும் ஒருவரால் நிரப்ப முடியாத இடைவெளியை மற்றயவர் நிரப்பிக் கொண்டிருப்பதனையே நான் காண்கிறேன்.
இந்நிலையில் இரு தரப்பினரிடையேயும் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகள் எந்த எல்லைக்குள் இருந்தால் அது சமூகத்திற்கும் இஸ்லாத்திற்கும் நல்லதாக அமையும் என்ற நோக்கத்திலேயே இதனை எழுதுகின்றேன். ஒரு தரப்பை ஆதரித்து மறுதரப்பை நிராகரிக்கும் போக்கில் நான் இதனை எழுதவில்லை.
அக்குரனை ஜம்இய்யதுல் உலமா உஸ்தாத் மன்சூருக்கு எதிரான கண்டனக் கூட்டமொன்றை ஒழுங்குசெய்திருக்கின்ற நிலையில் எழுகின்ற நியாயபூர்வமான கேள்விகளையே இங்கு நான் அனைவரதும் கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகின்றேன்.
இன்றைய அரசியல் நெருக்கடி சமூகத்தில் பலகேள்விகளை எழுப்பியிருப்பதை நாம் அறிவோம். அந்தக் கேள்விகளைக் கேட்கும் போது ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆதரவாகப் பேசுவது போன்றுதான் இருக்கும். உண்மை அதுவல்ல, ரணில், மஹிந்த, மைத்திரி என்போருக்கு அப்பால் நாட்டின் சட்டம், ஒழுங்கு, ஜனநாயகம் என்வற்றை கருத்தில் கொண்டே அந்தக் கேள்விகள் எழுகின்றன. அதேபோன்று நான் கேட்கும் கேள்விகள் உஸ்தாத் மன்சூருக்கு ஆதரவானதாகத் தோன்றலாம். உண்மை அவ்வாறல்ல. இஸ்லாத்தின் சட்டம், ஒழுங்கு, பாரம்பரியம் என்பவற்றைக் கருத்தில் கொண்டே இந்தக் கேள்விகள் எழுகின்றன.
சிந்திப்பவர்களுக்கு இக்கேள்விகள் பல உண்மைகளை உணர்த்தக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
1. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கிளைதான் அக்குரனை ஜம்இய்யதுல் உலமா. உஸ்தாத் மன்சூருக்கு எதிரான கண்டனக் கூட்டம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிலைப்பாடு என்ன?
2. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காதியானிகளுக்கெதிராக இலங்கை முஸ்லிம் சமூகம் சார்பில் ஒரு பிரகடணத்தை வெளியிட்டது. ஷியாக்கள் தொடர்பில் 'மனாகிபுஸ் ஸஹாபா' என்ற தலைப்பில் பிரசாரங்களை முன்னெடுத்தது...
வரவேற்கத்தக்க இந்த முன்னெடுப்புகள் ஒரு பக்கம் இருக்க... உஸ்தாத் மன்சூருக்கு எதிரான முன்னெடுப்பு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு நற்பெயரை பெற்றுத் தருமா? அல்லது இழுக்கை ஏற்படுத்துமா?
3. உஸ்தாத் மன்சூர் எதிர்க்கப்பட வேண்டிய அணியில் எந்த வரிசையைச் சேர்ந்தவர்.
காதியானியா? ஷீஆவா? அல்லது...? பிக்ஹு மஸாயில்களில் அக்குரணை ஜம்இய்யதுல் உலமாவோடு முரண்படுபவரா?
4. அவரது முரண்பாடுகள் இஸ்லாமிய ஷரீஅத் வரையறைகளுக்கு அப்பாற்பட்டதா? அல்லது அனுமதிக்கப்பட்ட கருத்து வேறுபாடுகளுக்காக எமது முன்னோர்களால் வரையப்பட்ட எல்லைகளுக்கு உட்பட்டவையா?
5. அனுமதிக்கப்பட்ட கருத்து வேறுபாட்டு எல்லைகளையும் அந்த எல்லைகளுக்குள் நின்று கருத்து வேறுபடுவோருக்குள்ள உரிமைகளையும் அந்த உரிமைகளை மாற்றுக் கருத்துடையோர் எங்கனம் மதித்து நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் உள்ளடக்கியதாகவே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தனது ஒற்றுமைப் பிரகடணத்தை வெளியிட்டது. அந்த பிரகடணம் ஞாயிறண்டு நடைபெறப் போகும் கண்டனக் கூட்டத்தின் போது கவனத்தில் கொள்ளப்படுமா?
6. உஸ்தாத் மன்சூர், அனுமதிக்கப்பட்ட கருத்து வேறுபாட்டு எல்லைகளைத் தாண்டிச் சென்று எமது ஷரீஆப் பாரம்பரியங்களுக்கு இழுக்கை ஏற்படுத்திய ஒரு வழிகேடராயின். சமூகம் அவரால் வழிகெட்டுப் போகாமல் பாதுகாக்கும் பொறுப்பை அக்குரனை ஜம்இய்யதுல் உலமா எடுத்துக் கொள்வது முறையல்ல. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பது தான் முறை. காரணம் உஸ்தாத் மன்ஸூர் அக்குரனையோடு தனது பணிகளை மட்டுப்படுத்திக் கொண்டவரல்ல. அவரது பணிகள் தேசம் கடந்து சர்வதேசம் வரை சென்றிருக்கின்றன. அவரால் கவரப்பட்ட அவரிடம் மார்க்கம் கற்கும் பல்லாயிரம் பேர் நாட்டிலும் வெளியிலும் இருக்கிறார்கள்.
7. அனுமதிக்கப்பட்ட எல்லைகளுக்குள் கருத்து வேறுபாடு கொள்ளும் உரிமை, அந்த எல்லைகளுக்குள் நின்று தனது சூழலுக்குப் பொருந்தக்கூடியது எனத் தான் கருதும் கருத்தை வெளியிடும் உரிமை அந்தக் கருத்துடன் 'ஆதாப்' களைப் பேணி முரண்படும் உரிமை எனபவற்றால் இஸ்லாமிய சட்டத்துறை பலம் பெற்று வளமடைகின்றது. ஞாயிறன்று நடைப்பெறப் போகும் நிகழ்ச்சியில் அதனைக் காணமுடியுமாக இருக்குமா? உஸ்தாத் மனசூர் அங்கு அழைக்கப்பட்டு அவரது விளக்கத்தை முன்வைக்க அனுமதிக்கப்படுவாரா?
8. அனுமதிக்கப்பட்ட எல்லைகளுக்குள் நின்று காலத்துக்கும், சூழலுக்கும் பொருந்துகின்ற புதிய கோணங்களை அறிமுகம் செய்வதும் அந்தப்புதிய கோணங்கள் பற்றிய ஆரோக்கியமான கலந்துரையாடல்களைத் துவக்கி வைப்பதும் 'இஜ்திஹாத்' பணியின் முதல் எட்டுக்களாகும். என்பதை உஸூலுல் பிக்ஹைக் கற்ற உலமாக்கள் நன்கறிவார்கள்.
அவ்வாறான தொரு பணியைத் தான் உஸ்தாத் மன்சூர் செய்கிறார் என்ற அபிப்பிராயம் கொண்ட உலமாக்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கு அக்குரணை ஜம்இய்யதுல் உலமா நடத்தப் போகும் ஞாயிறு நிகழ்ச்சி போதுமானதாக இருக்குமா? அல்லது உஸ்தாத் மன்சூரிடம் எடுப்பதற்கு ஒன்றுமில்லை அவர் ஒரு சாபக்கேடு என்ற செய்தி தான் அன்று சமூகமளிக்கின்றவர்களுக்குக் கிடைக்குமா?
9. இவைகள் எதுவும் எமக்கு முக்கியமானதல்ல. 'உஸ்தாத் மன்சூரை அவமானப்படுத்தி சமூக நீரோட்டத்திலிருந்து அவரை ஓரமாக்குவது தவிர' என்ற அபிப்பிராயம் கற்றறிந்த உலமாக்களிடம் நிச்சயமாக இருக்காது என்று நினைகிறேன்.
உஸ்தாத் மன்சூரை மையப்படுத்தி (ஆரம்பத்தில் கூறியது போல்) நான் இதனை எழுதவில்லை. மன்சூர்கள் யாராக இருந்தாலும் அவர்களை எதிர்கொள்ள வேண்டிய இஸ்லாமிய அணுகுமுறை பற்றிய விழிப்புணர்வை இலக்காகக் கொண்டே நான் இதனை எழுதுகின்றேன். அந்த வகையில் முரண்படுவோருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற உதாரணத்தை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களது வரலாற்றிலிருந்து பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் யமனுக்குச் சென்றிருந்த வேளை அவர்களால் சகிக்க முடியாத ஒரு கொடுமை அங்கு நிகழ்வதை அவதானித்தார்கள் யமனில் இருந்த கவர்னர் அங்கிருந்த ஷீஆக்கள் மற்றும் ஹவாரிஜ்கள் போன்ற வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதைக் கண்டார்கள். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் வழிகெட்ட அந்த சிந்தனைப் பிரிவுகளின் கொள்கைகளை அங்கு சென்ற பிறகுதான் கற்றார்கள்... பின்னர் அழகிய முறையில் அவர்களோடு விவாதித்தார்கள்... உண்மைகளைத் தெளிவுபடுத்தினார்கள்... பலர் திருந்தவும் செய்தார்கள்.
எனினும் கவர்ணரின் அடக்குமுறையை அவர்கள் சகித்துக்கொள்ளவில்லை நேராக கவர்னரிடம் சென்று அவரது அணுகுமுறைக்கு கடுமையாகத் தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார்கள்... அப்பாஸியர்கள் மீது மக்கள் வெறுப்புகொள்ளும் நிலை இதனால் அதிகரிக்கும் என எச்சரித்தார்கள்.
இமாமின் அறிவுபூர்வமான ஆதாரங்களுக்கு மறுப்புச் சொல்லமுடியாமல் திணறிய கவர்னர் கலீபா ஹாரூன் றஷீதுக்கு செய்தியனுப்பினார். 'உங்களது ஆட்சிக்கெதிராகக் கலகத்தைத் தூண்டும் சிலர் இருக்கின்றார்கள் அவர்களது விவகாரம் தொடர்பில் ஒரு முடிவைத் தாருங்கள்' என்று
அவர்களை பக்தாதுக்கு அனுப்பிவைக்குமாறு கலீபாவின் உத்தரவு வந்தது. வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஒன்பது பேரையும் இமாமையும் விலங்கிட்டு அந்த கவர்ணர் பக்தாதுக்கு அனுப்பி வைத்தார்... அதன் பின் நடந்தவைகளை விரிவஞ்சி விடுகின்றேன்.
இஸ்லாமிய அடிப்படைகளோடு தெளிவாக முரண்படுகின்ற வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன் இமாமவர்கள் நடந்துகொண்ட விதமே இவ்வாறிருக்கின்ற போது அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் நடந்து கொள்ள வேண்டிய முறையை விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கின்றேன்.
எமது சிறப்புமிக்க இந்த வரலாற்றுப் பாரம் பரியத்தை இல்லாமல் செய்வது ஆயிரம் மன்சூர்களை இல்லாமல் செய்வதை விட ஆபத்தானது என்பதைக் கூறவே நான் முற்படுகின்றேன்.
என்னை அக்குரனை ஜம்இய்யதுல் உலமாவுக்குத் தெரியும். அவர்களையும் நானறிவேன். உஸ்தாத் மன்சூரும் என்னைப் பொறுத்தவரை அதே அந்தஸ்தில் இருபவர்தான். நீங்கள் அனைவரும் இந்த உம்மத்துக்கு அவசியமானவர்களே. கருத்து முரண்பாடுகள் இல்லாத உலகமொன்றை உங்களாலோ எங்களாலோ உருவாக்க முடியாது அதுவும் கருத்துச் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டதொரு ஜனநாயக நாடொன்றில்.
கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்க்கும் கூட்டங்களை நடத்த வேண்டாம் என்று நான் கூறவில்லை பின்பற்ற வேண்டிய எமது பாரம்பரியத்திற்குரிய சிறப்பான, உன்னதமான வழிமுறை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையே அனைவருக்கும் எடுத்துரைக்க முற்படுகிறேன்.
இது எனது பணிவான முன்வைப்பு
அல்லாஹ் அவனது மார்க்கத்தின் மேன்மைக்காக உழைக்கின்ற அனைவரையும் பொருந்திக் கொள்கவானாக!
Sheikh Akbar if its happen to one Person from Tableek Jamath or Thowheed Jamath Will you TAKE YOUR time to write like this/write in this way???
ReplyDeleteSheikh Akbar will you write and speak like this if its happen to any of Tableek Jamath or Thowheed Jamath people???
ReplyDeleteஷியாக்களின் ஏஜெண்டுகள் ஒவொருக்கொருவர் என்றுமே அவர்கள் கூட்டாளிகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள்
ReplyDeleteஅல்லாஹ் குரானிலே குறிப்பிடும் ஒரு முக்கிய மான சம்பவம் லூத் அலை அவர்களின் சமூகத்தை அழித்த சம்பவம்.
ReplyDeleteஇதில் நமக்கும், அக்குறனையில் இருப்பவர்களுக்கும் படிப்பினை நிச்சயமாக இருக்கின்றது.
எதிலும் ஒரு நியாயம் வேண்டும் மக்களே!
ReplyDelete"எதிரிக்கு எதிரி நண்பன் - மன்சூர்"
"சத்தியத்திற்கு மட்டுமே நண்பன் - தெளஹீத்"
மன்சூரிக்கு எதிராக இன்று நடப்பது சரியா பிழையா என்பதை ஆராய்வதை விட, அதனைப் பற்றி பிழை என்று பேச மன்சூரின் வால்களுக்கும், நடுநிலை நக்கிகளுக்கும் உரிமை இருக்கின்றதா என்பதை நாம் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.
மன்சூர் ஹோமோசெக்ஸ் ஆ பை (Bi) ஆ இல்லையா, ஹோமோசெக்ஸ் ஒருவருக்கு இஸ்லாம் பேச முடியுமா முடியாதா என்கின்ற பிரச்சினை ஒரு பக்கம் இருக்கட்டும், அதற்கு இஸ்லாமிய ரீதியிலான சாட்சியங்களுடன் ஆதாரம் வேண்டும் என்பது முக்கியம், அதில்லாமல் மன்சூரை எமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மொட்டையாக குற்றம் சாட்ட முடியாது. விடயம் அதுவல்ல,,,,
மன்சூறிற்கு எதிராக கிளர்ந்து எழுந்து அக்குரணை அஸ்ணாப் பள்ளியில் மத்ஹபு வகையறாக்கள் நடாத்தும் நிகழ்ச்சி பிழை என்று மன்சூறிற்கு வாழ் பிடிக்கும் வாரிசுகளே, எதையும் பேசுவதற்கு ஒரு நியாயம் வேண்டும்.
2005 ஆம் ஆண்டு PJ இலங்கை வந்து அக்குரனையில் பிரச்சினையாகி, அதற்கு எதிராக மறைந்த நியாஸ் மெளலவி தலைமையில் ஹுப்பு, தப்லீக், தரீக்கா கூட்டம் காடைத்தனமாக பொதுக் கூட்டம் போட்டு PJ யையும், இஸ்லாத்தையும் கேவலமான வார்த்தைகளில் திட்டிக் கொட்டிய மேடையில் ஏறி மன்சூர் உரையாற்றியதை மறக்க முடியுமா?
கேவலமான ரவ்டிகளின், கோமாளிகளின் கூட்டத்தில் இயக்க வெறிக்காக, தஹ்வீதை வீழ்த்த வேண்டும் என்பதற்காக "எதிரிக்கு எதிரி நண்பன்" என்று ஏறிய மன்சூரின் கேவலமான செய்கையை மறக்க முடியுமா?
அன்றைக்கு விதைத்ததை மன்சூர் இன்றைக்கு அறுவடை செய்கின்றார்.
Slander is haraam, and is indeed a major sin, if the person slandered is chaste and innocent of zina.
ReplyDeleteThe only thableeq person to perpetuate controversial issues recently in Nusran Bin Noori . Can anyone justify his hypocracy?
ReplyDeleteNo wonder! Imam Shafi (rah) was labelled a Shia agent during his life time by uneducated!
ReplyDeleteவிமர்சனங்களை ஏற்கும் பக்குவம் உலமாசபைக்கும் தப்லீக் அமைப்புக்குமில்லை
ReplyDeleteமுறையாக பதில் சொல்வதை விட்டு ஷியாக்களோடு ,சம்பந்த படுத்துவதை நிறுத்த வேண்டும் இதுவும் ஒரு அபாண்டம் இதை நிரூபிக்கவில்லை என்றால் அவதூறு செய்த பெரும் பாவம் ஷியாவுக்கு விரோதமான அமைப்போடு தொடர்பு படுத்துவது இட்டுக்கட்டுவது ,சம்பந்த பட்டவர்கள் மன்னிக்காது அல்லாஹ் மன்னிக்க மாட்டான் முடிந்தால் ஒரு பட்டிமன்றம் வைத்து ஆதாரப்பூர்வமாக நிரூபியுங்கள் - நீங்களா மகாநாடு கூட்டி முடிவெடுக்கும் அபூஜஹீலின் கொள்கையை விட்டு உங்களுக்கு எதிர் தரப்பையும் அழைத்து முடிவுக்கு வருவதை விட்டு உம்மத்துகளிடையே பிளவை வளர்க்காதீர் இஸ்லாம் ஒன்றும் உங்க வீட்டு சொத்தல்ல
நல்ல கேள்வி. Sheick Akbar most probably will not speak on behalf of thableek jamath. These people are always biased.
ReplyDeleteI totally agree with "True F says" comments..
ReplyDeleteThese so called Neutral approach Jamaath brother/mawlavi, have not done so in the past, whenever Tableeq or Tawheed jamaath members got into issues like this.
For them.. They can consider they are neutral in approach as every one thinks... BUT it is clear for what this article is written.
Dear brothers, stay away from SHIA and Jamaaths connected to them. IF not you will be affected by the disease of find mistakes of Anbiyas and Sahaabas like this group.
Nam theriyamal vivathikka mudyathu Jose aaki ariwayum islathayum alika muyatchikka ventam
ReplyDeleteDear 'TrueF' where u were on the occation of crescent issues or born after that? Was he writing to save his members??
ReplyDeleteWell Said 'Atteeq Abu' Jezakallah. one of the reson to problems against Muslims in sri lanka by kind of those intelligents
ReplyDelete