Header Ads



வ‌ட‌க்கு அபிவிருத்தியை பொறுப்பெடுத்த‌ ர‌ணில், கிழக்கு அபிவிருத்தியை கையில் எடுக்காதது ஏன்...?

வ‌ட‌க்கு அபிவிருத்தியை பொறுப்பெடுத்த‌ பிர‌த‌ம‌ர் ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ த‌ன‌து ஐ தே மு க‌ட்சிக்கு  99 வீத‌ம் வாக்க‌ளித்த‌ கிழ‌க்குக்கு அபிவிருத்தியையும் த‌ன் கையில் எடுத்திருக்க‌லாம். அல்ல‌து அப்ப‌டியொரு அமைச்சை கிழ‌க்கில் ஒருவ‌ருக்கு கொடுத்திருக்க‌லாம். மாறாக‌ கிழ‌க்கு துபாயாகி விட்ட‌தால் இனி அபிவிருத்தி தேவையில்லை என‌ நினைத்து விட்டாரோ தெரிய‌வில்லை.

யுத்த‌த்தால் வ‌ட‌க்கு ம‌ட்டும் பாதிக்க‌ப்ப‌ட‌வில்லை. கிழ‌க்கும் க‌டுமையாக‌ பாதிப்ப‌டைந்துள்ள‌து என்ப‌தை அர‌சிய‌ல் உய‌ர் ம‌ட்ட‌ங்க‌ள் இன்ன‌மும் புரியாம‌ல் இருப்ப‌து க‌வ‌லை த‌ருகிற‌து.

 கிழ‌க்கில் குறிப்பாக‌ முஸ்லிம் ப‌குதிக‌ள் வெளித்தோற்ற‌த்தில் ந‌வீன‌ம‌ய‌மாக‌ தெரிந்தாலும் உட்க‌ட்ட‌மைப்பு மிக‌ மோச‌மாக‌ சிதைவ‌டைந்துள்ள‌து.  ப‌ல‌ பிர‌தேச‌ங்க‌ளுக்கான‌ பாதை, நீர் விநியோக‌ம் போன்ற‌வை அபிவிருத்தி பெறாத‌தால் ம‌க்க‌ள் ஓரிட‌த்திலேயே அடைப‌ட்டு வாழ‌க்கூடிய‌ நிலையில் உள்ள‌ன‌ர். இத‌ன் கார‌ண‌மாக‌ இய‌ற்கையான‌ சுவாச‌ம், சிறுவ‌ர்க‌ள் விளையாடுவ‌த‌ற்கான‌ சூழ‌ல் போன்ற‌வை இன்றி குடியிருப்புக்களின் நெருக்க‌ம் கார‌ண‌மாக‌ மிக‌ மோச‌மான‌ நோய்க‌ளும் ப‌ர‌விக்கொண்டிருக்கின்ற‌ன‌.

முஸ்லிம்க‌ள் த‌ம‌க்கு உண்ண‌ உண‌வில்லையாயினும் வீடுக‌ளை அழ‌காக‌ க‌ட்டுவ‌தில் முணைப்பு காட்டுவ‌தால் கிழ‌க்கில் சில‌ முஸ்லிம் ப‌குதிக‌ள் அபிவிருத்தி அடைந்த‌து போல் காட்சி த‌ந்தாலும் பெரும்பாலான‌ ம‌க்க‌ள் அடிப்ப‌டை வ‌ச‌தி கூட‌ இல்லாம‌ல் வாழ்கிறார்க‌ள்.

ஆக‌வே உட‌ன‌டியாக‌ பிர‌த‌ம‌ர் ரணில் விக்ர‌ம‌சிங்க‌ இத‌னை த‌ன‌து க‌வ‌ன‌த்தில் கொண்டு வ‌ர‌ வேண்டும். கிழ‌க்கு அபிவிருத்திக்கென‌ ஒரு அமைச்ச‌ர‌வை அந்த‌ஸ்த்துள்ள‌ அமைச்ச‌ராக‌ முஸ்லிம் ஒருவ‌ரையும் அத‌ற்கு பிர‌தி அமைச்ச‌ராக‌ த‌மிழ‌ர் ஒருவ‌ரையும் நிய‌மிக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும்ப‌டி பிர‌த‌ம‌ரை உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

2 comments:

  1. Evan muslimgalukku pachchai turohi

    ReplyDelete
  2. ilangai thamilar everum vadakil irunthu amaichchar pathavi peravillai. neegal thaan kilakkil irunthu govt udan sernthu amaichargalaga irukkurigal ,thamilarukku karanam adithu amaichar pathavi pera thevai,athanal ranil athai poruppu eduthaar. mootalgalukku vilangathu

    ReplyDelete

Powered by Blogger.