Header Ads



சற்றுமுன் மகிந்த விடுத்துள்ள, விசேட அறிக்கை

ஜனநாயகத்தை  ஏற்படுத்துவதற்கு பொதுத்தேர்தலே ஒரே வழியென  மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனநாயகமும் பொதுத்தேர்தல்களும் என்ற நீண்ட அறிக்கையில் இலங்கை மற்றும் சர்வதேச அனுபவங்களை சுட்டிக்காட்டி அவர் பொதுத்தேர்தல்களின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்

அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள சில விடயங்கள்:

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல்களை  நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை இலங்கையில் மாத்திரம் காணமுடியும்.

ஜனாதிபதி அரசமைப்பிற்கு ஏற்ப வர்த்தமானி அறிவித்தலொன்றை விடுத்ததுடன் தேர்தலிற்கும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்குமான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது, ஏற்கனவே திட்டமிட்படி  அனைத்தும் இடம்பெற்றிருந்தால் நாட்டில் ஸ்திரதன்மையை ஏற்படுத்தியிருக்க முடியும்.

கடந்த வருடம் நவம்பர் மாதம்  எல்லைநிர்ணய விவகாரம் தொடர்பில் சிலர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததன் காரணமாக உள்ளுராட்சி தேர்தல்கள் இடம்பெறாமலிருக்க கூடிய ஆபத்து ஏற்பட்டது.

எனினும் தேர்தல் ஆணையாளர் நான் தேர்தலை நடத்தியே தீருவேன்  என தெரிவித்ததும் அரசாங்கம் அதனை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டது நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்ட மனுக்களும் விலக்கப்பட்டன.

அவ்வேளை அரசியல் நோக்கங்களிற்காக நீதிமன்ற நடைமுறைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பது தெளிவாகியது.

இன்று நாட்டில் ஆறு மாகாணசபைகள் இயங்காத நிலையில் காணப்படுகின்றன முன்னையை அரசாங்கம் தேர்தல்களை கடந்த ஒரு வருட காலமாக நடத்தவில்லை.

நாங்கள் யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே 2008 இல் விடுதலைப்புலிகளை அகற்றிய பின்னர் கிழக்கு மாகாணசபை தேர்தல்களை நடத்தினோம்.

வன்னியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றிய பின்னர் 2013 இல் நாங்கள் வடமாகாண சபை தேர்தல்களை நடத்தினோம்.

இன்று யுத்தமற்ற நிலையிலும் அந்த இரு மாகாணங்களும் மாகாணசபைகள் அற்ற நிலையில் காணப்படுகின்றன.

ஐக்கியதேசிய கட்சியும் அதனுடன் இணைந்த கட்சிகளும் மக்களை ஏமாற்றுவதற்காக தவறான அறிக்கைகளை விடுத்துவருவதன் காரணமாக கடந்த காலத்தில் இடம்பெற்ற  சம்பவங்கள் சிலவற்றை சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.

எங்களுடைய முதலாவது பாராளுமன்ற தேர்தல் காலம் முதல் அவசியமான சந்தர்ப்ங்களில் எல்லாம் தேர்தலிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1952 இல் பிரதமர் டிஎஸ் சேனநாயக்க இறந்தவேளை அடுத்தது யார் என்ற மோதல் ஐக்கியதேசிய கட்சிக்குள் உருவானது.

டிஎஸ்சேனநாயக்கவிற்கு அடுத்த நிலையில் சேர் ஜோன் கொத்தலாவல காணப்பட்ட போதிலும் ஆளுநர் சோல்பரி டட்லி சேனநாயக்காவை பதவி ஏற்குமாறு  அழைத்தார்.

பிரதமரான ஒரு சில நாட்களில் அவர் புதிய தேர்தல்களிற்கு அழைப்பு விடுத்து ஆளும் கட்சிக்குள் காணப்பட்ட மோதல்களிற்கு தீர்வை காண்பதற்காக மக்களின் புதிய ஆணையை பெற்றார்.

1959 இல் எஸ்டபில்யூ பண்டாரநாயக்கவின் படுகொலைக்கு பின்னர் டபில்யூ தகநாயக்க பிரதமரானார்.

அமைச்சரவைக்குள் பிளவுகள் ஏற்பட்டவேளை அவரும் புதிய தேர்தல்களிற்கு அழைப்பை விடுத்தார்.

பலவீனப்படுத்தப்பட்ட ஜனநாயகத்திற்கு தேர்தல்கள் மூலம் மாத்திரே. ஸ்திரதன்மையை ஏற்படுத்த முடியும்.

இலங்கையின் அரசமைப்பின் படி இறைமை என்பது மக்களிடத்திலேயே உள்ளது  பாராளுமன்றத்திடமில்லை.

மக்கள் தங்கள் இறைமையை தேர்தல் வாக்களிப்பு மூலமே பயன்படுத்துகின்றனர்.

ஜனநாயகத்தை மதிக்கும் அனைவரையும் இந்த விடயம் குறித்து அவதானமாக ஆழ்ந்து சிந்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டியதன் இரகசியம் இந்த நாட்டு மக்களுக்கு பரகசியமாசிவிட்டது. அதைச் செய்து கொள்ள பதவி இடம் கொடுக்கவில்லை. எனவே அடுத்தபக்கத்தை நோக்கி காயை நகர்த்த ​வேண்டியதுதான். ஆனால் இவர் அடுத்த பக்கம் போகும் போது அந்த பைல்களைக் களவாட முடியாவிட்டால் மற்றொரு இன,வேறுவகையான பிரச்னைகளைத் தோற்றுவிக்க முயற்சி செய்வார். பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  2. u have to go election...no pblm but now ur detting PM post not suitable this tym..y ur afraid.ur all matters now publishd.

    ReplyDelete

Powered by Blogger.