Header Ads



நாட்டில் அரசாங்கம் இல்லை, பாராளுமன்றம் கூடியது - சபாநாயகர் கவலை


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரின் பங்குபற்றலின்றி நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்று வருகிறது.

நாடாளுமன்ற அமர்வு,  இன்று(05), காலை 10.30 அளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமானது. அதற்கு முன்னதாக காலை 9.30 க்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற அமர்வை தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிடிவாதத்துடன் செயற்படுகிறார் என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற் குறிப்பிடவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் நேரடி ஒலிபரப்புக்காக இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்துக்கு  பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை ஒலிபரப்பு செய்யுமாறு பல முறைகள் ​தெரிவித்தும் அதனை ஒலிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

1 comment:

  1. It is simple ..

    File a case against to him for not following the agreement of broadcasting parliament session as agreed by the payment already.

    ReplyDelete

Powered by Blogger.