Header Ads



நாட்டின் சிறந்த, பிரஜைகளாக மாற வேண்டும் - பிரிகேடியர் அஸாட் இஸ்ஸதீன்


புனர்வாழ்வு ஆணையகம் ஊடாக பல்வேறு பட்ட வாழ்வாதார உதவிகளை அரசாங்கம் கடந்த காலம் தொடக்கம் செய்து வருகின்றது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டவர்களுக்காக  நாட்டின் பொருளாதார மேம்பாடு கருதி இத் திட்டம் மேற்கொண்டு வருகிறோம். 

என புனர்வாழ்வு பணியகத்தின் பின்னாய்வுப் பொறுப்பாளர் பிரிகேடியர் அஸாட் இஸ்ஸதீன் தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டவர்களுக்காக இன்று (18) செவ்வாய்க் கிழமை கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து சுயதொழிலை மேற்கொள்ள 23 முன்னால் போராளிகளுக்கு தலா இரு ஆடுகள் வீதம் மொத்தமாக 46   ஆடுகள் வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில் சமூகமயப்படுத்தப்பட்டு நாட்டின் நற்பிரஜைகளாக மாறவேண்டும். 

தங்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்தி சிறந்தவர்களாக வருவதற்கான ஒரு கட்ட நடவடிக்கையாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பாரியதொரு மாற்றமாக இவ்வாறான சுயதொழில் ஊக்குவிப்பு விளங்குகிறது. 

இது மட்டுமல்ல இன்னும் பல உதவிகளை எதிர்காலத்தில் புனர்வாழ்வு ஆணையகம் ஊடாக மேற்கொள்வதற்கான பல கட்ட நடவடிக்கைகளை உரிய அமைச்சின் ஊடாக முன்னெடுத்து வருகிறோம் சிறந்ததொரு முன்மாதிரியான சமூகமாக நற்குணமுள்ள பிரஜைகளை எல்லோரும் மிளிர வேண்டும் எனவும் தங்களது வாழ்வு சிறப்பாக அமைய பொதுவாக மீண்டும் இந்த இடத்தில் வைத்து அனைவருக்கும் பிரார்த்திக்கிறேன் என்றார்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

No comments

Powered by Blogger.