முஸ்லிம் திருமண மேடையில் மகிந்த அமர்ந்ததும், அஷ்ரப் சொல்லிக் கொடுத்ததும்..!!
சக்தி தொலைக்காட்சியில் நான் பணியாற்றும்போது ஒரு நாள் அமைச்சர் அஷ்ரப் ஒரு நிகழ்வுக்கு வந்திருந்தார்...
வாசலில் பன்னீர் சந்தனம் குங்குமம் வைக்கப்பட்டிருந்தது...
அவரை வரவேற்ற ஒரு பெண் ஊழியர் சந்தனம் வைக்க முயன்றார்.. அதனை அமைச்சர் அஷ்ரப் மென்மையாக சிரித்தபடி மறுத்தார்...
அப்போது அங்கிருந்த எனக்கு பொறுப்பாக இருந்த ஒரு அதிகாரி அந்த புதிய பெண் ஊழியரை சற்று கோபத்துடன் பார்த்தார்...
அதை கவனித்த அஷ்ரப் மேக்கப் ரூம் சென்ற போது தாம் ஏன் பொட்டு வைக்க மறுத்தார் என்று தமது சமயம் மறுக்கும் சில விடயங்களை மென்மையாக - தன்மையாக சொன்னார்... கேட்கவே ஆவலாக இருந்தது...
இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால்...
மஹிந்த ராஜபக்ச பேருவளை திருமண இல்லத்திற்கு சென்று அமர்ந்திருக்கும் ஒரு காட்சி சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. விமரிசிப்பது அவரவர் உரிமை...
ஆனால் விடயம் தெரிந்தவர்கள் அன்று அதனை அவரிடம் சுட்டிக்காட்டியிருக்கலாம்.. அந்த வைபவம் ஒரு பெண்ணின் திருமண நிகழ்வு... இன்னொரு இனத்தவர் மதத்தவர் நம் நிகழ்வுகளுக்கு வரும்போது நாம் தான் சிலவற்றை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்...
இது மஹிந்தவுக்கு வக்காலத்து வாங்கும் பதிவல்ல... தமிழ் பேசும் மக்கள் நாங்கள்.. சில விடயங்களில் எங்களை நாங்களே சரி பார்த்துக் கொள்ளல் வேண்டும்... அல்லது தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் .
சகட்டு மேனிக்கு விமரிசிப்பதால் மறைமுகமாக எங்களை நாங்களே குத்திக்கொண்டிருக்கிறோம்...!
Ramasamy Sivarajah
மரியாதைக்குரிய தலைவர் அஷ்ரப் ஓரு தனித்துவம் வாய்ந்த தலைவர்.
ReplyDeleteதிருமணத்திற்கு அன்னியர்கள் வருவது தப்பில்லை, மகிந்த வந்ததும் தப்பில்லை ஆனால் எல்லா திருமணத்திலும் அவர் மணவரையில் மணமகளிற்கு பக்கத்தில் தான் இருப்பாரோ.
ReplyDeleteவெட்க சுபாவம் ஈமானின் முக்கிய கிளை என்று நபியவர்கள் கூறியதை வாப்பா மறந்திட்டார்
When we live and interact with wider community we should have some manners and customs to protect..
ReplyDeleteI do not blame any one .
It may have been formers presidents habit to sit with groom and brides in weeding halls ..
It might have been his way of wishing new couple....
It might have been sinaha tradition to do that ..
But we should know how to deal with it ..
It's our fault to do this like this ..
We do not have our wedding in an Islamic way ..
Who said that we should be e a big wedding or luxious one .
Why spend millions on wedding ?.
We can invite others but why not we do it within Islamic ethics ?..
I feel sorry for them.
It is not their fault but family or decision makers should have thought about it all before they do this
Spot on. .
ReplyDeleteGreat explanation this how it should have been handled ..100% I agree with you.
அந்த பெண்ணின் பாதுக்வலரும் கணவரும் ஒரு பெண்ணாக இருந்தால் அதுத்தவருகாகு சொல்ல முடியும்.
ReplyDeleteநம்மவர்கள் திசை மாறி அரசியலுடன் அனைத்தையும் காக்கின்றனர்.
ReplyDeleteமஹிந்தருக்கு கல்யாணம். அதில் சில புத்தி சுவாதீனமற்றவர்களுக்கு கும்மாளம்.
ReplyDeleteதனிமனிதர்களின் தனிப்பட்ட பாவங்களை பகிரங்கமாக திருத்தினால் அவை சமூகத்திலிருந்து ஒழிந்து விடும் என்பது பலரின் புரிதல். இந்தப்புரிதல் பாவங்களின் தோற்றுவாயில் பற்றி தெளிவில்லாத பாமரர்களின் புரிதல் ஆகும். சமூக வாழ்வு தொடர்பான அதிகமான ஜாஹிலிய சிந்தனைகளும், ஒழுங்கமைப்புக்களும் நிறைந்து காணப்படும் இலங்கை போன்ற மத ஒதுக்கல் அரசுகளுக்குள் வாழும் மக்களிடம் ஒழுக்கக்கேடு காணப்படுவது வியப்புக்குரிய விடயமே அல்ல. “தீய அரசுகள் தீமையின் விளைநிலங்கள்” என்று செய்யித் அபுல் அஹ்லா மௌலான மௌதூதி ரஹீமஹுல்லாஹு அவர்கள் கூறியுள்ளார்கள். தீய அரசுக்குள் தீமை செய்யாத மனிதர்களை எதிர்பார்ப்பது, ஆற்றுக்குள் இடறி விழுந்து ஒருவர் ஈரம் படாமல் எழும்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது.
முதலில் மக்களின் நடத்தைகளில் அரசியல் செல்வாக்கு செலுத்துகின்றது என்ற புரிதல் எல்லோருக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியதாகும். இதை புரிந்து கொண்டவர்களால் மாத்திரமே சமுதாயத்தில் உள்ள மனிதர்களின் தீஞ்செயல்களை நிதானத்துடன் அணுகமுடியும். தீஞ்செயல்களை கதைக்காமல், பேசாமல் அரசின் தலையில் பழியை தூக்கி போட்டுவிட்டு; புட்டும் கறியும் சாப்பிட்டு விட்டு படுத்துறங்க வேண்டும் என்ற அர்த்தத்தில் நான் இதை எழுதவில்லை. மாறாக ஜாஹிலியத்துக்கள் நிறைந்து காணப்படும் மத ஒதுக்கல் தேசங்களுக்குள் பாவங்கள் முற்றாக தவிர்க்கப்பட முடியாத சூழல் உண்டு என்றதொரு யதார்த்தமிகு சிந்தனைத் தெளிவுடன் மக்களை நெறிப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும் என்ற அடிப்படியிலேயே இதை எழுதுகின்றேன்.
இரண்டாவது விடயம் இஸ்லாமிய சூழல் நிறைந்த நாடாக இருந்தாலும் சரி, அனாச்சாரங்கள் நிறைந்த நாடாக இருந்தாலும் சரி, தனி மனிதர்களின் கண்ணியத்தை சிதைக்கும் வண்ணம் தனிப்பட்ட பாவங்களை பகிரங்கப்படுத்தி ஒழுக்கவகுப்பெடுப்பது முற்றிலும் தவறான செயலாகும். தனது குடும்ப உறுப்பினர்களின் தனிப்பட்ட பாவச்செயல்களை எவ்வாறு யாரும் பள்ளிவாயல் ஒலிபெருக்கியில் திருத்துவதில்லையோ, அதே போன்றுதான் சமூக உறுப்பினர்களின் தனிப்பட்ட பாவங்களையும் சமூக வலைத்தளமான முகநூலில் திருத்தக்கூடாது. பிறரின் தனிப்பட்ட குறைகளை பெயர்கூறி, படம் போட்டு சீர்திருத்தம் செய்ய முற்படும் யாருக்கும் இதயச்சுத்தியுடன் கூடிய சமுதாய அக்கறை கிடையாது. அவர்கள் பிறரின் குறைகளை பகிரங்கப்படுத்துவதன் மூலமாக தங்களை அக்கறையாளர்களாக மக்கள் கருதவேண்டும் என்ற குரூர சிந்தனைகொண்டு, இன்னொருவரின் தவறுகளை துருவித்தேடி எடுத்து, தங்கள் பிரபல்யம் தேடும் குரங்கு மனத்தை மகிழ்ச்சிப்படுத்த பிறரை துயருக்குள்ளாக்கும் மனநோயாளிகள் ஆவார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ இஸ்லாமிய கலாச்சரப்புரிதலற்ற சிங்களவர், அந்தப்பெண்ணின் குடும்பத்தார் இஸ்லாமிய கலாச்சாரத்துக்குள் உள்வாங்கப்படாத இந்த முஸ்லிம் உம்மத்தின் ஓர் அங்கம்.
இந்தப் புரிதல் இல்லாத பலர் அந்தப் பெண்ணை கண்டவரெல்லாம் உமிழ்ந்து விட்டுபோகும் வெற்றிலைப்படிக்கமாக ஆக்கியிருக்கும் பதிவுகளைக் காணும்போது நாமெல்லாம் எவ்வளவு பெரிய ஒழுக்க வீழ்ச்சியில் இருக்கின்றோம் என்ற எண்ணம்தான் எனக்குத் தோன்றியது. எவ்வளவு குரூர மனம் படைத்த மனிதர்களுடன் நாம் வாழுகின்றோம் என்ற கவலைதான் வந்தது.
அதிகாரம் படைத்த ஒருவனை விலகி நில் என்று சொல்லவும், தனது குடும்பத்தாரை எதிர்த்து தனது வாழ்வின் முக்கிய நாளான திருமண நாளை துயருக்குரிய நாளாக மாற்றிவிடக்கூடாது என்று அஞ்சியும் மௌனம் காத்த, மிகவும் ஒழுக்கமுள்ள ஆனால் சூழ்நிலையால் கோழையாகிப்போன ஒரு அப்பாவிப் பெண்ணாக அவள் இருந்திருந்தால், எவ்வளவு பெரிய மனவலியை சுற்றித்திரியும் இந்தப்படங்கள் அவளுக்கு ஏற்படுத்தியிருக்கும்? அவளை சார்ந்துள்ள எத்தனை கண்ணியமிக்க குடும்ப உறுப்பினர்களை அவை பாதித்திருக்கும்? அந்தக்குடும்பம் தவறை உணர்ந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆனால் நிச்சயம் இந்தக் கொடூர சமூகத்திலிருந்து தூர விலகிச்செல்லும். ஒரு முஸ்லிமின் தனிப்பட்ட சில தவறுகளை சகித்துக்கொள்ளாமல் வன்முறை புரியும் நாம் எப்படி இந்த உம்மத்தை நேசிப்பவர்களாக இருக்க முடியும்?
சமூகத்தில் உள்ள தனிமனிதர்களின் குறைகளை எம்மால் உணர முடிந்தால் அவற்றை பொதுப்படையாக நம்மிடமிருந்து ஒழிக்கவேண்டிய விடயங்களாக அடையாளப்படுத்தி உபதேசம் புரிவதே பண்பாளர்களின் அணுகுமுறை, தனிப்பட்ட பாவத்துக்குரிய ஒவ்வொரு உறுப்பினரையும் மேடையேற்றி அவமானப்படுத்துவது ஈனர்களின் அணுகுமுறை.
நிகழ்வுகளால் உசுப்பேறி உளறித்திரியும் உருப்படாத நிலையிலிருந்து தீர்வுகளை தரவல்ல பெரும் சிந்தனைகளை ஆலோசிக்கும் மக்களாக மாற முயற்சிப்போம்.
Very good advice from Br. M.R.M. Rayees to Jaffna Muslims, what they want to gain from this news, please remove this news from your WEB immediately which is hurting our hearts.
ReplyDeleteஇதை நீங்க பிரசுரிப்பதற்காக வெட்கப்பட வேண்டும்
ReplyDelete