ரணிலை உடனடியாக, பிரதமராக நியமியுங்கள் - றிசாத் பிடிவாதம்
ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நீதிமன்றின் தீர்ப்பிற்கு மதிப்பளித்து 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உடனடியாக ஐக்கிய தேசிய முன்னணியின் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும்.
இதற்கு முன்னதாக பதவி வகித்த அமைச்சரவையை அவ்வாறே ஜனாதிபதி பதவியில் அமர்த்த வேண்டுமென ரிசாட் பதியூதீன் கோரியுள்ளார்.

Post a Comment