நாட்டுக்கு நல்லது நடக்கனுமா..? பிரதமராக மகிந்தவை நியமியுங்கள்
நாட்டில் அபிவிருத்தியோ அல்லது நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டுமாயின் மகிந்த ராஜபக்ச மீண்டும் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த 49 நாட்களில் பிரதமராக மகிந்த ராஜபக்ச நாட்டின் அபிவிருத்திக்காக மிக சிறந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தினார் எனவும் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சில கட்சிகள் இணைந்து புதிய கட்சியை ஆரம்பிகக் போவதாக கூறுகின்றன. அந்த கட்சியின் சின்னமாக தவளையை பயன்படுத்திக்கொள்ளுமாறும் பியல் நிஷாந்த கூறியுள்ளார்.

Post a Comment