ஜனாதிபதிக்கு இன்று, இறுதி வாய்ப்பு - பேச்சு தோல்வியடைந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை
நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று -03- இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
ஜனாதிபதியுடன் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை இறுதியானது எனவும் அது தோல்வி அடையும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிலைமை தொடர்பில் இந்த வாரத்திற்குள் தீர்வு ஒன்று கிடைக்கவில்லை என்றால் வேறு நடவடிக்கை ஒன்றைய முன்னெடுக்க தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கலந்துரையாடல் மேற்கொண்டு காலத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் ஐக்கிய தேசிய கட்சிக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலந்துரையாடல் ஊடாக பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை என்றால் இறுதி நடவடிக்கையாக பொது மக்களை இணைந்து கொண்டு வீதியில் இறங்கி போராடுவோம் என அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்றிரவு 8.00 மணிக்கு சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்ற போதிலும் அது கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவன் எந்தவகையிலும் ஐதேக.சார்பாக எந்த உடன்பாட்டுக்கும் வரமாட்டான்.அதையும் ஸிக்ஸெக் போட்டு சூழ்ச்சியில் முறியடிக்க முயற்சிப்பான். அடுத்த கட்டநடவடிக்ைகயை உறுதியாகவும் மிகவும் திட்டமிட்டு அது எந்தவகையிலும் அரசியலமைப்புக்கு மாற்றமில்லாத வகையில் அமைந்தால் வெற்றி நிச்சியம். ஆனால் இந்த வீணாப்போனவனைத் துரத்த அடுத்தகட்டம் மிகவிரைவாக ஈடுபடுவது மிகவும் அவசியமும் நாட்டின் மக்களின் அவசியத்தேவையும் கூட.
ReplyDelete