Header Ads



"ஒரு முஸ்லிமுடைய 2 நாட்கள் சமனாக மாட்டாது"

முந்திய தினத்தை விட அடுத்த தினமானது அனைத்து வகையிலும்  முன்னேற்றகரமானதாக இருத்தலேயே இந்த நபிவாக்கு உணர்த்துகிறது.

ஆன்மீகம், அறிவியல், கண்டுபிடிப்பு, தொழிற்துறை, கல்வி வளர்ச்சி, இராணுவக்கட்டமைப்பு, வியாபார ஒழுங்கு, குடும்ப உறவு என மனிதனோடு பின்னிப்பிணைந்து போயுள்ள அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேற்றகரமான மாற்றத்தை நோக்கி நகர்ந்தாக வேண்டும்.

ஏனெனில் "நிச்சயமாக எனது தொழுகையும் , ஏனைய அனைத்துக் காரியங்களும், வாழ்வும், மரணமும் பிரபஞ்சத்தை படைத்து பரிபாலிக்கின்ற இறைவனுக்கேயாகும்" என ஒவ்வொரு தொழுகையின் போதும் இக்குர்ஆன் வசனத்தை கூறி படைத்தவன் முன் சான்று பகருகின்ற இலட்சிய சமூகம் நாங்கள்.

வேடிக்கை என்னவென்றால அவ்வாறான ஒப்பந்தத்திற்கு மாற்றமாக வெறும் ஒரு சில வணக்கவழிபாடுகளுக்கு மாத்திரம் முக்கியத்துவமளித்துவிட்டு ஏனைய காரியங்கள் அனைத்தையும் பொடுபோக்காக விட்டு விடுகின்றோம்.

இவ்விடயத்தில் உலகத்தை வளப்படுத்துகின்ற இமாரத் எனும் பணியிலிருந்து வெகு தூரம் விரண்டோடி நிற்கின்றோம். அதனால்தான் நாம் அமலாகக் கருதிய ஒரு சில இபாதத்துகளோடு திருப்திகண்டு விட்டு, வாழ்வதற்கு அவசியமான அனைத்துத் துறைகளிலும் மாற்றுமத சகோதரர்களின் உற்பத்தியை வேண்டி நிற்கும் வெறும் நுகர்வுச் சமூகமாக மாறிப்போயுள்ளோம்.

விளைவு; அரசியல், அறிவியல், இராணுவம், சட்ட ஒழுங்கு, உணவு முறை, தொழிநுட்பம் என யாரோ உருவாக்கித் தருவற்றை அனுபவித்துக்கொண்டு இன்னும் நாம் இவவுலகத்திற்கு முன்மாதிரியான சமூகம் நாங்கள்தான் என வெட்கமில்லாமல் பறைசாட்டிக்கொண்டிருக்கிறோம்.

எமது சிந்தனையை மாற்ற வேண்டும்; மார்க்கம் எதிர்பார்க்கும் இலக்கை சரிவர புரிதல் வேண்டும்; ஒழுங்கற்றுக் கிடக்கும் எமது நடத்தைக் கோலங்களை மாற்றியமைக்க வேண்டும்; மொத்தத்தில் மனித நலன்களின் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கும் இம்மார்க்க அடையாளங்களை உலகத்தாருக்கு அருளாக பரிசளிக்க வேண்டும்

ஆகையால்தான் ஒரு முஸ்மிடைய இரண்டு நாட்கள் சமனாக மாட்டாது. அது குறுகிய வட்டத்திற்குள் தேங்கிக் கிடக்காது நாளாந்தம் சாதனைகளை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கும். நீங்கள் அல்லாஹ்விற்காக செய்கின்ற அனைத்துக் காரியங்களிலும் இந்த முன்னேற்றம் புலப்பட வேண்டும்.

நாம் எத்தனை வருடங்களை முன்னேற்றமின்றி முடக்கிவிட்டோம். அதன் விளைவுகளை இன்றைய முஸ்லிம் சமூகம் அனுவித்துக்கொணடிருக்கிறது. இந்நிலையிலிருந்து மாறுபடுவோம். நமக்காக இவ்வுலகில் வாய்ப்பளிக்கப்பட்ட பொறுப்புக்களினது முன்னேற்றகரமான மாற்றத்திற்காய் அல்லாஹ்வின் திருப்தியை நாடி உழைப்போம். நிச்சயமாக வெற்றி மிக அண்மையில் இருக்கிறது.

ஒழுங்கற்றவற்றை ஒழுங்குபடுத்துவதே வெற்றியின் அடிபபடை

- அபு அரிய்யா -

2 comments:

  1. அது வீனாப்போன நாட்கள்.

    ReplyDelete

Powered by Blogger.