Header Ads



சஜித் பிரேமதாசவை தலைவராக்கினால் மாத்திரமே ஐ.தே.க. யினால் தலைதூக்க முடியும் - அஸாத் சாலி

ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தை விட்டு செல்லாதவரை ஐக்கிய தேசிய கட்சியினால் அமைக்கப்படும் பாரிய கூட்டமைப்புக்கு  யாரும் செல்லமாட்டார்கள். சஜித் பிரேமதாசவை தலைமைத்துவத்தில் அமர்த்தினால் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சியினால் இந்த தேர்தலில் தலைதூக்க முடியும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று -13- கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

 தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி பொதுத்தேர்தலுக்கு முகம்கொடுப்பதாக இருந்தால் கட்சில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும். 

குறிப்பாத கட்சி ஆதரவாளர்கள் கட்சியின் தலைமைத்துவம் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படவேண்டும் என்றே கோரி வருகின்றனர். ஆதரவாளர்களின் கோரிக்கைக்கு ரணில் விக்ரமசிங்க செவிசாய்க்காவிட்டால் தேர்தலில் கட்சியின் நிலையை அறிந்துகொள்ளலாம்.

அத்துடன் பாரிய கூட்டணி அமைத்து பொதுத்தேர்தலுக்கு முகம்கொடுப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.அவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து  நீங்காதவரை பாரிய கூட்டமைப்பு ஒருபோதும் சாத்தியமாகாது. ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டுச்சேரவும் யாரும் விரும்பாது என்றார்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

1 comment:

  1. இன்று இந்த நாடில் மூன்று இனங்களும் உரிமையுடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர் அசாத் சாலி அந்த வகையில் ரணீல் சரியாக தனது பதவியை மக்களுக்கு பயன் படுத்தவில்லை தனது நண்பனின் சுகபோதை பார்த்தாரே தவிர மக்களின் பிரச்சினையை பார்க்க வில்லை இன்று அசாத் சாலி போன்ற அரசியல்வாதிகள் நடுநிலை வகிப்பதால் மக்கள் உண்மைகளை விலங்கி கொள்கின்றனர் ஆகவே ரணீல் பதவி விலகினால் ராஜபக்க்ஷ குடும்பதை ஒரம் கட்ட முடியியும்

    ReplyDelete

Powered by Blogger.