Header Ads



சர்வஜன வாக்கெடுப்புக்கு திட்டம் - மைத்திரியின் மற்றுமொரு துரும்புச் சீட்டு...?

 நாடாளுமன்றத்தை மீண்டும் ஒத்திவைத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களின் வாக்குரிமையை சபாநாயகர் கரு ஜயசூரிய பாரதூரமான வகையில் தரம் தாழ்த்தி உள்ளதால், அதனை மீண்டும் நிலைநாட்ட எஞ்சியிருக்கும் ஒரே மாற்று வழி நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது என்பதே ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களின் நிலைப்பாடு என ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டுமா, இல்லையா எனக் கோரி இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு பின்னர் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.