Header Ads



ஐ.தே.க.யிலிருந்து பல்டியடித்த எம்.பி.யின் வீட்டுக்கு முன் மக்கள் எதிர்ப்பு

புதிய அரசாங்கத்தின்  கலாசார உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சராக, நேற்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க பிரியந்தவின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு மாரவில பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நேற்று மாலை பிரதியமைச்சராக அசோக்க பிரியந்த பதவியேற்ற பின்னர், நாத்தாண்டியா- மரத பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு முன்பாக வந்த சிலர் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து பிரதியமைச்சர் அசோக்க பிரியந்தவின் வீட்டுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசத்தில் பொலிஸ் ரோந்து சேவையொன்றையும் முன்னெடுக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாரவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. So his business against to the people who voted to him...
    Good Lanka

    ReplyDelete

Powered by Blogger.