Header Ads



அதிகார மோகத்திலுள்ள மைத்திரி - மஹிந்த கூட்டணியின், தோல்விக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

ஆட்சி அதிகார மோகத்தில் உள்ள மைத்திரி - மஹிந்த கூட்டணியை தோல்வியடைய செய்து  வலுவான ஜனநாயக ஆட்சி முறைமையை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் கொடூரமான நிறைவேற்று அதிகாரத்திற்கு மக்களை பலியாக்குவதா அல்லது ஜனநாயகத்தை மேலும் வலுவாக உறுதிப்படுத்துவதா என்ற நெருக்கடியான தீர்மானத்தை கருத்தில் கொள்ள வேண்டிய நிலையில் நாடு தற்போது உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2

நாட்டு மக்கள் ஜனநாயகத்தினுடைய மிகப் பெரிய வெற்றியை கண்டுள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இரு நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில் இன்று அதன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் விசேட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்தே ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது டுவிட்டரில் “ நாட்டு மக்கள் மக்கள் ஜனநாயகத்தினுடைய மிகப் பெரிய வெற்றியை கண்டுள்ளனர். நாம் நாட்டை மேலும் முன்னோக்கி கொண்டு சென்று நாட்டு மக்களின் இறையாண்மையை நாம் மீண்டும் நிரூபித்துக்காட்டுவோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


4 comments:

  1. Very Soon We will send you Thief Ranil also to Home. All these problem happening because of you don't have back born. And you also became a big thief.
    We are in need of well educated good leaders for our country.
    Qualified people... Please come out and take the country from dirty culprit politicians.

    ReplyDelete
  2. It is a very good solution.

    ReplyDelete
  3. we think it is a begining of democracy.

    ReplyDelete
  4. அவசரப்பட வேண்டாம்.இந்த மூன்று ஆண்டுகளாக என்னத்த கிழிச்சீங்க என்பதை அடுத்த தேர்தலில் தெரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு இல்லையாக்கும் அந்த அதிகார மோகம்.....

    ReplyDelete

Powered by Blogger.