நாளை பாராளுமன்றத்தில் எமது, பெரும்பான்மையைக் காண்பிப்போம் - அடித்துக்கூறும் ரணில்
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர், ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது அவர் தெரிவித்ததாவது,
இன்று மக்களின் இறையாண்மை வெற்றி பெற்றுள்ளது. அரசியல் ஒழுக்கம் ஒரு படி முன்னேறிச் சென்றுள்ளது. உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை நாம் வரவேற்கின்றோம்.
அரசியலமைப்பை புறந்தள்ளிவிட்டு செயற்பட முடியாதென உயர்நீதிமன்றம் இன்று கூறியுள்ளது. இது ஒரு வெற்றி மாத்திரமே, இன்னும் எமது போராட்டத்தில் நாம் வெற்றி பெற வேண்டும்.
நாம் பாராளுமன்றத்தில் எமது பெரும்பான்மையைக் காண்பிப்போம். பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகர் அல்ல, ஜனாதிபதியே அறிவித்திருந்தார். அதன்படி, நாளை -14- நாம் பாராளுமன்றம் சென்று எமது பலத்தைக் காண்பிப்போம்.

தயவு செய்து நீங்கள் பெரும்பான்மையை காண்பித்துவிட்டு சுமார் ஒரு கிழமையின் பின் கவுரவமாக இராஜினாம்ம் செய்து கட்சிக்கு நல்ல தலைவரை தேர்வு செய்து அவரை பிரதமராக்கி நாட்டு நலன்களை முன்னிலை படுத்தவும் உமது கட்சிக்கு நல்லதொரு கவுரவ ஆலோசகராக இருந்து மக்கள் நலன்களை தீர்க்க முயற்சிக்கவும்
ReplyDeleteதெளிவான ஆலோசனை
ReplyDeleteRiyal this is absolutely correct the only there will be future UNP
ReplyDelete