Header Ads



மைத்திரிபால சரியான முடிவை எடுக்காமல் இருப்பதே, நெருக்கடிகள் எல்லாவற்றிற்கும் காரணம்

பெரும்பான்மை பலம் இல்லாமல்  அதிகாரத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளை தான் ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன் என்று  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சரியானதொரு முடிவை எடுக்காமல் இருப்பதே இப்போதைய நெருக்கடிகள் எல்லாவற்றிற்கும் காரணம்.

இதனால் சிறிலங்கா பொதுஜன முன்னணி,  ஐக்கிய தேசிய கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த நாட்டுக்குமே பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிப்பதற்கு பல வழிகள் உள்ளன. தேர்தல் ஒன்று வந்தாலே அதனை செய்து விடலாம்.

பெரும்பான்மை பலமில்லாமல் பலாத்காரமாக  அதிகாரத்தை கைப்பற்றும் நடவடிக்கையை ஒருபோதும் நான் ஆதரிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Highly appreciated decision.

    ReplyDelete
  2. நேர்மையான ஒரு அரசியல் தலைவன் .நாட்டை ஆளும் தகுதி உண்டு

    ReplyDelete

Powered by Blogger.