Header Ads



உலகின் முதல் ஜனாதிபதியாக, மைத்திரிபால இடம்பிடித்துள்ளார் - நக்கல் அடிக்கும் ரஞ்சன்

நிரூபிக்கப்பட்டாத  கொலை சதி தொடர்பான  தொலைபேசி உரையாடலை வைத்துக் கொண்டு நாட்டின் மீயுயர் அதிகாரம்    கொண்ட  பாராளுமன்றத்தை கலைத்து, அரசியல் நெருக்கடியினை மேலும்  வலுப்படுத்திய உலகின் முதல் ஜனாதிபதியாக  மைத்திரிபால சிறிசேன  இடம்பிடித்துள்ளார் என தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் இவ்வாறான செயற்பாடுகள் முற்றுமுழுதாக அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது எனவும்,  அவரது செயற்பாடுகளுக்கு வெகுவிரைவில் பதிலடி கிடைக்கப் பெறும்  எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி கொலை சதி தொடர்பில் தொலை பேசி உரையாடலை பகிரங்கப்படுத்திய நாலககுமார  இடம்பெறவுள்ள  பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதலில் கொலை சதி என்பது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்றே  குறிப்பிட வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியினர் கொலை சதி தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டினார்.  அதற்காகவே அரசாங்கத்தினை நெருக்கடிக்குள்ளாக்கினார். 

ஆனால் தற்போது குற்றத்துடன் தொடர்புப்பட்ட நாமல் குமாரவை நெருங்கிய கட்சியில் போட்டியிட  ஜனாதிபதி எவ்வாறு அனுமதிப்பார். கொலை சதியுடன் தொடர்புப்பட்டதாக குறிப்பிடப்படும் நாலக சில்வா எவ்வாறு குற்றவாளியோ அதே போன்றே நாலக குமாரவும் ஒரு சந்தேகத்திற்கிடமான குற்றவாளி எனவும் தெரிவித்தார்.

1 comment:

  1. Your right Mr. Even a actor like can not do this kind of acting.
    Very soon Mr. M Sena going to get the award for the BEST ACTOR of 2018.

    First of All we have to Stop VOTING to UNEDUCATED,Culprit & Criminal Politicians. If we don't do it our country going to HELL very soon..

    ReplyDelete

Powered by Blogger.