மஹிந்த வழங்கிய சன்மானத்துக்கு பிரதியுபகாரமாக, சுதந்திரக் கட்சியை அனாதையாக மாற்றிய மைத்திரி
மஹிந்த ராஜபக்ஷ தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட சன்மானத்துக்கு பிரதியுபகாரமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் அனாதையாக மாற்றியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு கட்சி இல்லை. இன்று அவரை அரசியல் ரீதியாக மஹிந்த ராஜபக்ஷ கொலை செய்துள்ளார். இன்று ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவுக்கு தனக்கென கூறிக் கொள்ள கட்சி ஆதரவாளர்கள் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன கடந்த அரசாங்கத்தின் ஜனநாயக நீரோட்டத்தில் நிலைத்து நின்றிருந்தால், 2020 வரையில் அவருக்கு ஜனாதிபதியாக இருந்திருக்க முடிந்திருக்கும். மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்டதனால், ஜனாதிபதியின் அந்த ஆட்சிக் காலம் முடியும் வரையில் இருப்பதற்கு மஹிந்த இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறு இடமளித்தால் அவர்கள் ராஜாபக்ஷாக்களே இல்லையெனவும் முன்னாள் அமைச்சர் சம்பிக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
Dc

YOUR RANIL ACT LIKE PRESIDENT.
ReplyDeleteRANIL DOESN.T COMPROMISE WITH MY3.HE SERVE MR REGIMENT.
THEREFOR ONLY MY3 TOOK THIS DECIDION.
சேரந்து கூட்டாக இருக்கும் போது அவர் நல்லவர்.இப்போது தனிப்பட்ட வேளையில் எல்லாம் அவர்குற்றம் தான். இதுதான் வீணாப் போன துவேசமும் சனாதிபதி பதவிக்கு கனவு காணும் துவேசிகளின் பண்பு. பொதுமக்களே இந்த நபர்கள் பற்றி கவனமாக இருங்கள்.
ReplyDeleteசுதந்திர கட்சி பற்றிய அனுதாபம் இவருக்கு ஏன் ஏட்படுகிறது ? மஹிந்த ஆட்சியை கண்டு பயப்படும் முதல் நபராக சம்பிக்க காணப்படுகின்றார் .
ReplyDelete