Header Ads



கண்ணீர் விட்டழுத வசந்த சேனாநாயக்கா - இனி பல்டியடிக்க மாட்டேன் என உறுதி

இனி ஒரு போதும் கட்சித்தாவ மாட்டேன் என மைத்திரி - மகிந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது அமைச்சு பதவியையும் இராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அலரி மாளிகையில் இன்று -26- மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது ஊடகங்களின் முன்னிலையில் வசந்த சேனாநாயக்க கண்ணீர் விட்டு அழுதார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.

இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறிய வசந்த சேனாநாயக்க மைத்திரி - மகிந்த தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினார்.

எனினும், இன்றைய தினம் அரசாங்கத்தில் இருந்து விலகிய அவர், அலரி மாளிகையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் குழு கூட்டத்திலும் கலந்துகொண்டிருந்தார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இனி ஒரு போதும் கட்சித்தாவ மாட்டேன். கடும் மனநிலையுடனே இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டேன்” என வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Check his Qualifications and Criminal/Police Records.. If its negative..
    Send him permanently home from politics.
    We don't need this kind of people anymore.

    ReplyDelete

Powered by Blogger.