ரணில் வேண்டாம், சஜித்தை பிரதமராக்க ஜனாதிபதி விருப்பம்...?
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து தொடர்ந்தும் தன்னால் பணியாற்ற முடியாது என்பதால், அது சம்பந்தமாக சிந்தித்து பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி அறிவி்த்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக வேறு ஒருவர் இருந்தால், மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, அந்த நபரை பிரதமராக நியமிக்க முடியும் என மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக்கட்சியினருக்கு உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி கூறியுள்ளார்.
இந்த பிரச்சினையை தொடர்ந்தும் நீடிக்கவிடாது தீர்த்துக்கொள்ள உதவுமாறும் ஜனாதிபதி, ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதிகளிடம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து பிரதமர் பதவியில் சஜித் பிரேமதாச நியமிக்கலாம் என ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ள போதிலும் தற்போது காணப்படும் நெருக்கடியான சூழ்நிலையில், அதனை எதிர்கொள்ளும் அனுபவமிக்க தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என சஜித் குறிப்பிட்டுள்ளார்.

ரனில் அவர்களே ஐகியதேசிய கட்சியை மிகவும் மதிக்கும் மக்களுக்காவும் நாட்டின் நலனுக்காவும் நீங்கள் கவுரவமாக இராஜினாமம்செய்துவிட்டு வேரொருவரை பிரதமராக்க அனுமதியுங்கள் உங்களுக்கு மக்களின் ஆதரவும் கண்ணியமும் மேலோங்கும்,மீண்டும் நீங்களும் ஜனாதிபதியும் ஒன்றாக முன்னேரிச்செல்லமுடியாது!
ReplyDeleteThat good idea.
ReplyDeleteஇதை முன்பே செய்திருக்கலாமே...
ReplyDeleteதூரநோக்கு சிந்தனையாளர்களை தங்கள் ஆலோசகர்களாக வைத்துக்கொள்ளுங்கள்... அவசரப்போக்கு ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமில்லை.
அப்போ முன்பு ஏன் மஹிந்தவை விரும்பினீர்கள்.
ReplyDeleteBUT He was able to work with MR, who he criticized beyond RNL in the past.
ReplyDeleteWE Need GOOD, Leaders not changing time to time..