அலரி மாளிகையிலிருந்து ரணில், வெளியேற வேண்டும் - அனுரகுமார
ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ரணில் விக்ரமசிங்க தற்பொழுது ஓர் நாடாளுமன்ற உறுப்பினராவார். அதனால் அவர் அலரி மாளிகையை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டும்.
ரணில் விக்ரமசிங்கவும், மஹிந்த ராஜபக்சவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். ரணில் இன்னமும் தாம் பிரதமர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்.
எனினும், மஹிந்த ராஜபக்சவோ ரணில் விக்ரமசிங்கவோ பிரதமர் கிடையாது. எனவே ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது.
இருவரும், ஓர் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராவார். எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளை மட்டுமே அனுபவிக்க முடியும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

You are good Only for TALKING and Mathematics. NOT for action.... Useless..
ReplyDelete@False (TrueF)
ReplyDeletewithout power they can only outspoken the issues, they are the only party who reveal the important issues, for now they can only do that.