நீதிமின்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக இருந்தால் நாட்டிலும், அரசியலிலும் என்ன நடக்கும்...??
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பில் இடைக்கால உத்தரவொன்று விதிக்கப்படுமாயின் நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டிய அவசியம் ஏற்படும்.
நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கமைய பொது தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அடுத்தகட்ட தீர்மானத்திற்கு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய நீதிமன்றத்தில் ஜனாதிபதிக்கு சார்பற்ற தீர்ப்பு வந்தால், ஜனாதிபதியினால் மக்கள் வாக்கெடுப்பு ஒன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பிலான மக்கள் கருத்திற்கமைய ஒரு மாதத்திற்குள் பொது தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய இன்றை தினம் நீதிமன்ற தீர்மானத்திற்கமைய பொதுத் தேர்தல் 40 - 50 நாட்கள் தாமதமாகி நடந்தப்படும் என்பதே இறுதி தீர்மானமாகியுள்ளது.

Post a Comment