Header Ads



நாளை 9 மணிக்கு, கட்சித் தலைவர்கள் கூட்டம்

சபாநாயகர் தலைமையில் கட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் வெள்ளிக்கிழமை 23-11-2018 அன்று காலை 9 மணிக்கு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்போது வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வு தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.