Header Ads



உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு - மாலை 5 மணிக்கு பின் தீர்ப்பு..?

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீது, உயர்நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாகவும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் அந்த அமர்வு இன்றுமாலை 5 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

2

நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக,உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள், 2 ஆவது நாளாகவும் இன்று (13), காலை முதல் இடம்பெற்று வந்த நிலையில், எதிர்தரப்பு மற்றும் அரச தரப்பு வாதப் பிரதிவாதங்கள் நிறைவுப் பெற்றிருப்பதாக அறியமுடிகிறது.

இந்நிலையில், மனுக்கள் மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்படுகின்றனவா அல்லது தீர்ப்பு இன்றைய தினம் கிடைக்கிறதா? என்பது குறித்து 5 மணிக்குப் பின்னர் தெரியவருமென, கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. குரங்கின் தீர்ப்பு போல ஆகிவிடாமல் அல்லாஹ் தான் பாதுகாக்கவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.