47 ஆசனங்களை மாத்திரம் வைத்திருந்த ரணிலுக்கு, பிரதமர் பதவியை வழங்கியமை சரியானதா..?
நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் , வெளிநாட்டு தூதுவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். கடந்த காலத்தில் தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்ற ஜனநாயக மீறல்களை சர்வதேசங்கள் அவதானிக்கவில்லை என்றே குறிப்பிட வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எலிய அமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,நல்லாட்சி அரசாங்கத்தினை ஏற்படுத்தி 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் செய்த தவறை திருத்திக் கொள்ள வேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது.
எமது நாட்டின் உள்ளக விவகாரங்களை தீர்த்துக்கொள்ள மக்களின் ஆணையினை நாடுவதை எவ்வாறு ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று குறிப்பிட முடியும். ஜனநாயகம் என்ற சொற்பதத்தினை தமக்கு ஏற்றாற்போல் சர்வதேசங்கள் மாற்றியமைத்துள்ளன எனவும் தெரிவித்தார்.
நாட்டின் ஆட்சி மாற்றம் மக்களின் தேவைகளுக்காக மாத்திரமே இடம்பெற்றுள்ளது.
அரசியல் தொடர்பில் நெருக்கடிகள் காணப்படும் பட்சத்தில் மக்களின் ஆணைக்கு மதிப்பளிப்பதே சிறந்த தீர்வாகும்.
அரசியல் நெருக்கடிகளுக்கு மக்களின் ஆணையினை நிச்சயம் மதிக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு தொடக்கம் அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடுகளே பாராளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளன.
தற்போது மாத்திரம் அரசியலமைப்பு மீறல் என்று எவரும் எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது .
2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மையினை மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்தார்.
இருப்பினும் அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படவில்லை. வெறும் 47 ஆசனங்களை பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டமை மாத்திரம் அரசியலமைப்பிற்கு சரியானதா என அவர் மேலும் தெரிவித்தார்.

You should pose this question to Sirisena as he had a deal with Ranil. As per the deal Sirisena became president and Ranil prime minister.
ReplyDelete47 ஆசனங்களை வைத்துக்கொண்டு ஒரே ஒரு எதிர் வாக்குடன் நிறைவேற்றப்பட்டதுதான் 19தாவத் திருத்தச்சட்டம்.
ReplyDeleteஎவ்வித நியாயமும் இல்லாமல் பிரதமர் பதவியை உங்கள் சகோதரன் பறித்தது சரி தானே.
ReplyDeleteஅப்போதுள்ள யாப்பின்படி ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தது. அது 19ஆம் திருத்த சட்டத்தின் மூலம் இல்லாமல் அக்கப்பட்டது (April 28 2015). சில நிபந்தனைகள் கொண்டுவரப்பட்டு அந்த நேரத்தில் மட்டும் பிரதமரை நீக்க முடியும்.
ReplyDeleteu gang try to foolish the public, but public know what is the right things...Just Shutup
ReplyDelete