Header Ads



ரிஷாத்தின் முயற்சியில், முசலியில் கடல்சார் பல்கலைக்கழகம்

மன்னார் முசலியில் கடல் சார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்குமாறு, திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற் பயிற்சி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவிடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அமைச்சரின் ஊடகப்பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கோரிக்கை கருத்திற்கெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கடல் சார் பல்கலைக்கழகத்தின் உப வேந்தரிடம், திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரியங்க பெரேரா, முசலியில் இந்தப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

“யுத்தத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டம் சமாதானம் ஏற்பட்ட பின்னர், படிப்படியாக வழமை நிலைக்குத் திரும்பி வருவதால், அங்கு வாழ்கின்ற மக்கள் தற்போது தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்து வருகின்றனர்.

மன்னார் மாவட்டம் கடல் வளங்களை கொண்ட மாவட்டமாக இருப்பதால், அங்கு வாழும் கணிசமான மக்கள் மீனவத் தொழிலை பிரதான தொழிலாகக் கொண்டு ஜீவனோபாயம் நடாத்தி வருகின்றனர்.

யுத்தத்தின் காரணமாக பல தசாப்தங்களுக்கு மேலாக இங்குள்ள மக்களின் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் வகையில், இந்தப் பிரதேசத்தில் கடல் சார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்துத் தந்து, மாணவ சமுதாயத்தின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்குமாறு வேண்டுகின்றேன்.

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள சிலாவத்துறை, அரிப்பு, கொண்டச்சி, நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வங்காலை, மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தலைமன்னார், பேசாலை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விடத்தல்தீவு, இலுப்பக்கடவை ஆகியன கடல் சார்ந்த கிராமங்களாகும்.

இந்த வகையில் மன்னார், முசலியில் இந்தப் பல்கலைக்கழகத்தை அமைப்பதன் மூலம், எதிர் காலத்தில் பல்வேறு பலா பலன்களை பெற்றுக் கொள்ள முடியும்” எனவும் கடல்சார் தொழிற்துறைகள் விருத்தியடைய இது வழிவகுக்குமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சர் கலாநிதி அமுனுகமவிடம் சுட்டிக்காட்டி உள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. One university in the name of late Ashraff; another in the name of Dr HIZBULLAJ mp; another now in the name of Richard Mp; who else wants university?
    Of course; Hakeem may dream one in upcountry?.
    I hope 22 Muslim Mps will have universities in their name ?
    I wonder if it's good or not bad ?
    We do not have a good Muslim school out of 750 Muslim schools .
    We do not have at least some good Professors in any field except a 4 or 5 good ones to name ..
    These people want to build houses without foundations..
    May Allah project Muslim community from weakness of this kind of leadership..
    They good intention but they do not have excellent vision and missions ..
    Same like idiot Arab leaders ..

    ReplyDelete

Powered by Blogger.