Header Ads



ஞானசாரரை விடுவிக்குமாறு, ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு - மைத்திரி என்ன செய்யப் போகிறார்...??

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலளார் கலகொடத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி இன்று சில பௌத்த பிக்குகள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்தனர்.

பெங்கமுவ நாலக தேரர், தல்கமுவே சுதீரானந்த, தியசென்புர விமல தேரர், மாகல்கந்தே சுதந்த தேரர் உள்ளிட்ட பலரும் ஜனாதிபதி செயலகத்திற்கு நேரில் சென்று இந்தக் கோரிக்கையை முன்வைத்தள்ளனர்.

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி ஒப்படைத்த மகஜரில் இந்த பௌத்த பிக்ககள் கையொப்பமிட்டுள்ளனர்.

நீங்கள் உங்களை படுகொலை செய்ய வந்த நபரை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யும் அளவிற்கு கருணையுள்ளம் கொண்ட தலைவராவீர்.

அது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஓர் முன்னுதாரணமாக அமைந்தது. கிராமத்தில் பிறந்து பௌத்த மத கோட்பாடுகளை பின்பற்றும் தலைவராகிய நீங்கள் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கும் வரையில் ஒட்டுமொத்த பௌத்த பிக்குகளும், பௌத்தர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. Dear President, If you are paying the mercy to the Prisoners who are criminals, Can you release all prisoners from the jail in Sri Lanka suc Muslim religious prisoners, Hindu prisoners and christian prisoners. why are you providing the special preference to this Buddhist criminal of Ghanasara ??

    ReplyDelete

Powered by Blogger.