துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், இருவர் பலி
யட்டியந்தொட்டை ஹல்கொல்ல பிரதேசம், உடகில்ம தோட்டத்தில், இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், பெண்ணொருவர் உட்பட இருவர் பலியாகியுள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
நபரொருவர் மேற்படி பெண்ணொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு, பின்னர் தன்னைத் தானே சுட்டுகொண்டுள்ளார் என்றுத் தெரியவருகிறது.
இச்சம்பவத்தில், உடகிலம தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும் தோட்டக் காவலாளியின் மகனுமே பலியாகியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment