Header Ads



கொழும்பில் ஜப்பானிய விமானந்தாங்கி, நாசகாரி போர்க்கப்பல்கள் (படங்கள்)


ஜப்பானிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பல் உள்ளிட்ட இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

உலங்குவானூர்தி தாங்கி கப்பலான ககா (Kaga), மற்றும் நாசகாரிக் கப்பலான, இனாசுமா (Inazuma)ஆகிய இரண்டு போர்க்கப்பல்களுமே சிறிலங்காவுக்கு நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டுள்ளன.

248 மீற்றர் நீளம் கொண்ட உலங்குவானூர்தி தாங்கி கப்பலான ககாவில்,  400 ஜப்பானிய கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.

28 போர் விமானங்களை அல்லது 14 பெரிய விமானங்களை தாங்கிச் செல்லக் கூடிய இந்த உலங்குவானூர்தி தாங்கிக் கப்பலில், தற்போது, 7 நீர்மூழ்கி எதிர்ப்பு உலங்குவானூர்திகளும், இரண்டு தேடுதல் உலங்குவானூர்திகளுமே தரித்துள்ளன.

151 மீற்றர் நீளம் கொண்ட இனாசுமா என்ற நாசகாரி போர்க்கப்பலில், 170 ஜப்பானிய கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.

இரண்டு ஜப்பானிய போர்க்கப்பல்களும், 5 நாட்கள் சிறிலங்காவில் தரித்து நிற்கும். இதன்போது சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பல்வேறு விளையாட்டு மற்றும் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

எதிர்வரும் 4ஆம் நாள் இந்தப் போர்க்கப்பல்கள் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.



No comments

Powered by Blogger.