Header Ads



இந்நூற்­றாண்டின் மிக மோச­மான, மனிதப் பேர­வலம் ஏற்­ப­ட­வுள்­ளது - அர்­துகான்

இந்த நூற்­றாண்டின் மிக மோச­மான மனிதப் பேர­வலம் ஏற்­ப­ட­வுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபை அச்சம் வெளி­யிட்­டுள்ள நிலையில் சிரி­யாவின் இட்லிப் நக­ரத்தின் மீதான சிரிய அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­யினைத் தடுத்து நிறுத்த முன்­வ­ரு­மாறு துருக்கி ஜனா­தி­பதி அர்­துகான் சர்­வ­தேச சமூ­கத்­திடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இடம்­பெ­ற­வுள்ள மனி­தா­பி­மான நெருக்­கடி தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபையின் கருத்தை வழி­மொ­ழிந்­துள்ள அதுர்கான், கிளர்ச்­சிக்­கா­ரர்­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள மாகா­ணத்தின் மீது மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள தாக்­குதல் துருக்கி, ஐரோப்பா மற்றும் அதற்கு அப்­பாலும் பாதிப்புச் செலுத்தும் என செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று அமெ­ரிக்க நாளி­த­ழான வோல் ஸ்ட்ரீட் ஜேர்­னலில் வெளி­யி­டப்­பட்­டுள்ள கட்­டு­ரையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிரி­யாவின் அப்­பாவி மக்கள் மாத்­தி­ர­மல்ல, முழு உல­கமும் அதற்­கான விலையைச் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இட்­லிப்பில் இடம்­பெ­ற­வுள்ள மனி­தா­பி­மான அனர்த்­தத்தைத் தடுத்து நிறுத்­து­வது ரஷ்யா மற்றும் ஈரானின் பொறுப்­பாகும் என கடந்த வாரம் தெஹ்­ரானில் ரஷ்யா மற்றும் ஈரா­னியத் தலை­வர்­களைச் சந்­தித்த அர்­துகான் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி பஷர் அல் அசாதின் பார்வை தற்­போது இட்­லிப்பின் பக்கம் திரும்­பி­யுள்­ளது. இந்த மாத ஆரம்­பத்­தி­லி­ருந்து அவ­ரது படைகள் சன­நெ­ரிசல் மிக்க மாகா­ணத்­தின்­மீது குண்டுத் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தன.

இந்தப் பிரச்­சினை தொடர்­பான எச்­ச­ரிக்கை ஐக்­கிய நாடுகள் சபையின் மனி­தா­பி­மான இணைப்­பிற்­கான முகவர் நிலை­யத்­தினால் கடந்த திங்­கட்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டது.

அண்­மையில் அதி­க­ரித்­துள்ள வன்­மு­றைகள் கார­ண­மாக நாம் ஆழ்ந்த கவ­லை­ய­டைந்­துள்ளோம், வன்­மு­றைகள் கார­ண­மாக 30,000 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். இந்த விட­யத்தை மிக நுணுக்­க­மாக அவ­தா­னித்து வரு­கின்றோம் என மனி­தா­பி­மான இணைப்­பிற்­கான முகவர் நிலையப் பேச்­சாளர் டேவிட் சுவான்சன் தெரி­வித்தார். யதார்த்­த­வாத எதி­ர­ணிக்கு ஆத­ர­வ­ளித்­து­வரும் துருக்கியும், அசாத்தின் அரசாங்கத்திற்கு ஆதரவளித்துவரும் ரஷ்யா மற்றும் ஈரானும் சிரிய முரண்பாட்டுக்குத் தீர்வுகாணும் நோக்கில் கடந்த ஒன்றரை வருடங்களாக நெருக்க மான உறவினைப் பேணி வருகின்றன.
-Vidivelli

1 comment:

  1. Dear Brother..

    May Allah Bless you and keep you firm in Ruling Turkey toward Islamic way of life.

    If Rassia, Iran support Bassar and destroy this IDLIB... Will you still keep relation with them for the sake of anything ?

    Please stay away from IRAN.. They are involving in direct killing and cleansing of Sunni Muslim from Syriya. But You seems to keep political connection with IRAN and Russia form reason NEWS.

    May Allah keep you strong and keep you away from the enemies of Islam

    ReplyDelete

Powered by Blogger.