Header Ads



உழ்கியா கொடுப்பது, பற்றி அமளிதுமளி - ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில் சம்பவம்

(மொஹொமட்  ஆஸிக்)

 ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில் இன்று 20 ம் திகமி இடம் பெற்ற பொதுக் கூட்டத்தின் போது. முஸ்லிம்கள் உள்ஹிய்யா கொடுப்பதற்காக ஹாரிஸ்பத்துவ  பிரதேச சபை எல்லைக்குள் மாடு அறுப்பதற்கு அனுமதி வள்ங்குவது தொடர்பாக ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னனி உறுப்பினர் விஜித குமார நதுன்கே உரையாற்றும் போது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்கள் வெலி நடப்பு செய்தத்டன் அதன் பின் சபையில் மிகுதியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களும் சபையின் பதில் தலைவலிடம் கூறி விட்டு சபையை விட்டு வெலியேரினர். 

 ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் அதன் தலைவர் ஆனந்த ஜயவிலால் அவர்களின் தலமையில்  இன்று 20 ம் திகதி இடம் பெற்ற போது ஐக்கிய தேசிய  கட்சியின் பட்டியலில் தெரிவாகி உள்ள ஜாதிக ஹெல உறுமயவை சேர்ந்த உறுப்பினர் தனுஷ்க மல்வெவ, கண்டி நகரில் புனித பெரஹர இடம் பெருவதாலும், கண்டி நகரில் மாடு அறுப்பதற்கு தடை விதித்துள்ளதினாலும், ஹாரிஸ்பத்துவையில் மாடு அறுப்பதற்கு தகுந்த இடம் இல்லாமையினாலும் மாடு அறுப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்ற பிரேரனை ஒன்றை முன்வைத்தார். இது தொடர்பாக தெலிவு படுத்திய  தலைவர் ஆனந்த ஜயவிலால் அவர்கள் பிரதேச சபையின் சட்டத்தின் படி இவ்வாறு மாடு அறுப்பதற்கு வின்னப்பித்தால் அதற்கு அனுமதி வழங்க வேண்டியுள்ளதால் அதனை தடைசெய்ய முடியாது உள்ளது என்று தெரிவித்தார்.

அதன் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக  தலைவர் சபையை விட்டு வெலியேரியதுடன் உப தலைவர்   விஜேசேகர மெதகெதர தலமை வகித்தார். 

அதன் போது உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னனியை சேர்ந்த விஜித குமார நதுன்கே  மாடு அறுப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக சபையின உறுப்பினர்கள் அறிவுறுத்த்பட வில்லை என்று நீண்ட நேரம் உரையாற்றினார் இவரது உரை இடம் பெற்றுக் கொண்டிருக்கும் போது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எதிர் கட்சி  தலைவர் சன்ன லியனகே, திலக் ரணசிங்க உற்பட உறுப்பனிர்கள் பலர் சபையில் இருந்து வெலி நடப்பு செய்ததுடன் அதற்கு சில  நிமிடங்களுக்கு பின்  சபையில் மிகுதியாக இருந்த ஏனைய உறுப்பினர்களும் சபையை விட்டு வெலியேரினர். 

இருந்த போதும் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் இருந்து தெரிவாகியுள்ள தனுஷ்க மல்வெவ சபை முடியும் வரை  சபையில்  இருந்தார். 

இங்கு கருத்து தெரிவித்த   கொஹாகோட  தயானந்த தேரர் பௌத்த பிக்கு ஒருவர் அங்கம் வகிக்கும் பிரதேச  சபை மூலம் மாடு அறுப்பதற்கு அனுமதிப் பத்திரம் வழங்க நேர்ந்ததையிட்டு தான் வெட்கப்படுவதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.