Header Ads



உழ்­ஹியாவின் போது, இப்படியெல்லாம் செய்யாதீர்கள்..!

முஸ்­லிம்கள் தங்­க­ளது உழ்­ஹியா கட­மையை நாட்டின் சட்ட திட்­டங்­களை மீறாத வகையில் ஏனைய சமூ­கத்­தி­னரின் உணர்­வு­களைத் தூண்­டாத வகையில் நிறை­வேற்ற வேண்­டு­மென அகில இலங்கை ஜம்­இ­ய்யத்துல் உலமா சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

சில தீய சக்­திகள் இன­வாத அமைப்­புகள்  உழ்­ஹி­யா­வுக்­காக பிரா­ணிகள் அறுப்­பதில் மற்றும்  போக்­கு­வ­ரத்து செய்­வதில் சட்­ட­மீ­றல்கள் ஏற்­பட்டால் அதனைக் கார­ண­மாகக் கொண்டு பிரச்­சி­னை­களை உரு­வாக்­கலாம். என்­பதால் சட்ட விதி­களை கவ­ன­மாகப் பின்­பற்ற வேண்­டு­மெ­னவும் அறி­வித்­துள்­ளது.

உழ்­ஹியா கடமை தொடர்பில் அகில இலங்கை ஜம்­இ­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் விடுத்­துள்ள வேண்­டு­கோளில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

முஸ்­லிம்கள் உழ்­ஹியா கட­மைக்­காக கொண்­டு­வரும் மிரு­கங்­களை மிகவும் காருண்­ய­மாக நடத்­து­வ­துடன் போதி­ய­ளவு  அவற்­றுக்­கான உண­வு­களைத் தடை­யின்றி ஏற்­பாடு செய்­ய­வேண்டும். தமது வீடு­களில் ஆடு மற்றும் மாடு­களை அறுக்­காது அதற்­கென அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள மடுவங்­க­ளிலே அறுக்க வேண்டும். பள்­ளி­வா­சல்­களில் கூட்டுக் குர்பான் (உழ்­ஹியா) கொடுப்­ப­தாயின் அதற்­கான அனு­ம­தியை ஏற்­க­னவே பெற்­றி­ருக்க வேண்டும்.

அறுக்­கப்­படும் பிரா­ணியின் எலும்­புகள், தோல் மற்றும் எச்­சங்­களை வெறு­மனே வீசி­யெ­றி­யாது அவை நிலத்­தினுள் புதைக்­கப்­பட வேண்டும். மிரு­கங்­களை அறுப்­ப­தற்­கான அனு­மதிப் பத்­திரம் பிர­தேச செய­ல­கங்­க­ளி­லி­ருந்து பெற்றுக் கொள்­ளப்­பட வேண்டும்.

உழ்­ஹியா கொடுப்­ப­வர்கள் தமது கட­மையை மதித்து இஸ்லாம் விதித்­துள்ள முறை­களைப் பேணி மிரு­கங்­க­ளுக்கு வேதனை ஏற்­ப­டாத வகையில் கட­மையை நிறை­வேற்ற வேண்டும். கடந்த காலங்­களில் சில இடங்­களில் உழ்­ஹியா கட­மையில் அர­சாங்­கத்தின் சட்­டத்­திட்­டங்கள் மீறப்­பட்­ட­மை­யினால் பல பிரச்­சி­னை­களை நாம் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது.

தேவை­யான அனு­மதிப் பத்­தி­ர­மின்றி மாடுகள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு போக்குவரத்து செய்யப்பட்டால் பொலிஸாரினால் மாடுகள் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்படலாம் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Problem of improper transport action of animals or inhuman treatment makes it haram. Therefore, how rational is it perform a Sunnah, when whether haram was committed in transportation and welfare cannot be guaranteed?

    ReplyDelete
  2. இது, மற்றும் ஹலால் சான்றிதழை இலவசமாக வழங்குவது உட்பட பல "ஞானோதயங்கள்" சுமார் 15-20 வருடங்களுக்கு முன்னரேயே வந்திருந்து, நமது சமுதாயத்தையும் சரியாக வழிநடத்தியிருந்தால் எமது பல அழிவுகளை தவிர்திருந்திருக்கலாம்.

    கசந்தாலும் உண்மை!

    ReplyDelete

Powered by Blogger.