Header Ads



பாகிஸ்தானின் ஒரு பகுதியே காஷ்மீர் -

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் பிரதமருக்காக ஒதுக்கப்படும் ஆடம்பரமான செலவுகளை தவிர்த்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் 116 இடங்களைக் கைப்பற்றிய பிடிஐ கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. நவாஸ் ஷெரீப் கட்சியின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றது.

 கூட்டணி கட்சிகளின்  ஆதரவுடன் 172 உறுப்பினர்களை கொண்டு இம்ரான் கான் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார். அவருடன்  அமைச்சரவை உறுப்பினர்களும் புதிதாக பொறுப்பேற்றுள்ளனர்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் உசேன் குரைஷி,இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை தொடர வேண்டிய தேவை உள்ளதாகவும், வரலாற்றுப்படி பாகிஸ்தானின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,இந்தியா,பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தையை மீண்டும் தொடருவது குறித்து இம்ரான் கானுக்கு,  பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார் எனவும் உசேன் குரேஷி தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.