பாராளுமன்றத்தில் விஜேதாசவுக்கு, ஹரீஸின் பதிலடி (வீடியோ)
உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் விரிவுரையாளர்களுக்கு பாலியல் இலஞ்சம் கொடுத்து பரீட்சைகளில் சித்தியடைவதாக பாராளுமன்றத்தில் உரையாற்றியதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி என்றவகையில் அது தொடர்பாக இந்தச் சந்தர்ப்பத்தில் பேசவிரும்புகின்றேன்.
உயர் கல்வி அமைச்சர் பல்கலைக்கழக மாணவிகளையும் விரிவுரையாளர்களையும் சம்பந்தப்படுத்தி பேசியிருந்தார். தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் விரிவுரையாளர்களுக்கு பாலியல் இலஞ்சம் கொடுத்து பரீட்சைகளில் சித்தியடைவதாக நாட்டின் தேசிய ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் அப்பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்வியியலாளர்கள், பொதுமக்கள் மிகுந்த கவலையடைந்தார்கள்.
இலங்கையில் அதிகளவிலான பல்கலைக்கழகங்கள் இருக்கும் நிலையில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் தொடர்பில் மட்டும் பேசுவது பொருத்தமற்றது என நினைக்கின்றேன். உங்களது அமைச்சின் கீழுள்ள நிறுவனம் தொடர்பில் விமர்சிப்பது ஒழுக்க விழுமியங்களுக்கு புறம்பானதாகும். அப்பிரதேசத்திலிருந்து குழுவொன்று வருகைதந்து பிழையான தகவல்களை அமைச்சருக்கு தந்தார்கள் என நான் அறிந்தேன்.
உண்மையில் அப்பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற மாணவர்கள் விஷேடமாக மாணவிகள் மிகுந்த கவலையடைந்துள்ளார்கள். எனவே அப்பல்கலைக் கழகத்தின் புகழையும் கீர்த்தியையும் உயர்வடையச் செய்வதற்கு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முயற்சிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் விஜேதாசாவுக்கு ஹரீஸின் பதிலடி...! !!! ???????
ReplyDeleteதலையங்கத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்புள்ளதாக எங்களுக்கு புரியவில்லை..!!
ஹரீஸ் அவர்களே, நீங்கள் மாணவர்கள் உங்களிடம் வந்து அழுகிறார்கள் என்று கூறுகிறீர்கள். நீங்கள் ஒரு முஸ்லீம், உண்மை பேசவேண்டும். அந்த பல்கலைக்கழக மாணவர்களே இந்த குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக ஒரு விரிவுரையாளருக்கு எதிராக ( அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ) பெரும் ஆர்ப்பாட்டமே செய்துள்ளார்கள். இந்த விடயம் லஞ்ச ஊழல் திணைக்களத்துக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது என்று விஜேதாச கூறுகிறார். அவன் அந்த விரிவுரையாளரின் பெயரையும் குறிப்பிட்டு தான் நான் கூறினேன் என்று கூறுகிறான். அங்கு மாபெரும் மாபியா ( பதிவாளரை குறிப்பிட்டு கூறுகிறான்) கூட்டம் இருக்கிறது, அந்த கூட்டம் உபவேந்தரை வேலை செய்ய விடுகிறார்கள் இல்லை என்று கூறுகிறான். இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா? ஹன்ஸார்ட்டை ஒரு தரம் பார்த்து விட்டு கதைக்கலாமே. இது அப்பம் தட்டி கூலாக்கும் விடயம்.
ஹரீஸ் அரசியல் இலாபத்துக்கான தேடலை விட்டு விட்டு...! உண்மைக்கான, முன்னேற்றத்துக்கான தேடலை தேடவும்.
He has just made a request to the minister Wijedasa, that's all. There is no "Bathiladi" as the title suggests.
ReplyDeleteஅமைச்சர் ஹரீஸ் யாருக்கு விழங்க வேண்டுமென்று தேங்குழல் பாசையில் பேசினாரோ தெரியல தனது சொந்த மொழியில் இன்னும் சற்று Smart ஆக பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் மட்டுமல்லாது நிறைய விடயங்களை சரளமாக பேசியிருக்கவும் முடிந்திருக்கும். என்ன செய்வது எறிபவன்கையில் பொல்லில்லை என்ற நிலைக்கு முஸ்லிம்கள் தளைப்பட்டு விட்டார்கள்.
ReplyDeleteமாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற முஸ்லிம் எம்பிக்கள் அமைச்சர்கள் வாய் மூடி காது தாழ்த்திக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் போலும். இப்படிப்பட்ட செம்மறி ஆடுகளை பாராளுமன்றம் அனுபியதையிட்டு மாவட்ட மக்கள் துக்கப்படுவது மட்டுமல்ல வெட்டப் படுகிறார்கள்.
My Comments... உங்கள் முதல் இருவரிகள் என்னை மிகவும் சிரிப்புக்குள்ளாக்கியது..So funny.. ..! ஆனால் இதனில் மிகவும் சிந்திக்க வேண்டிய விடயம் உள்ளது அதுதான் " smart " this is very very important.
ReplyDeleteஅடுத்த விடயம் நாம் கண்ணை மூடிக் கொண்டு சும்மா எதிர்க்க முடியாது. விஜேதாச இலங்கையின் ஒரு leading lawyer ( அவன் மாபெரும் துவேஷி என்பது வேறு விடயம்) அவனை எதிர்கொள்வதட்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அவன் ஹரீஸிடம் கேட்கிறான்... பாலியல் லஞ்சம் நடப்பதை பார்த்துக்கொண்டு இருக்கவா சொல்கிறாய் ( ஹரீஸ் இல்லை இல்லை என்கிறார்)..உமது எதிர்ப்புக்கு என்ன தான் காரணம் என்று கேட்கிறான். பாதிக்கப்பட்ட பிள்ளையின் பெற்றோர் முறையிட்டு உள்ளார்கள் என்று சொல்கிறான். இதெல்லாம் இப்படி இருக்க...அவர் பார்லிமென்டில் சொதப்பியதையும்.. சரியாக களநிலவரத்தை புரிந்து கொள்ளாமலும் அப்பம் தட்டி கூழாக்கியதை எப்படி அரசியல் இலாபமாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறார்கள். எந்தளவுக்கு என்றால் ஹரீஸிடம் அவன் மன்னிப்பு கேட்டதாகவும்..தன்னை அனோமா கமகேயும், தயா கமகேயும் பிழையாக வழிநடாத்தியதாகவும் கூறுகிறார்...!
சும்மா பிடித்துக் கொண்டு ஒருவரை எதிர்க்க முடியாது...காரண காரியத்தோடுதான் எதிர்க்க வேண்டும்.