Header Ads



"ஞானசாரர் சிறையிலிருந்தால் பரவாயில்லை, காவியுடையை கழற்றாதீர்கள்"


கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைத் தண்டனை அனுபவித்தால், பாரவாயில்லை எனினும் அவருக்கு மனித உரிமை என்ற வகையிலும் மத உரிமை என்ற வகையிலும் காவியை அணிய இடமளிக்குமாறு மாநாயக்க தேர்தல்கள் உட்பட பௌத்த மத குருக்கள் ஜனாதிபதியிடம் அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக சோசலிச மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கருத்து வெளியிடப்பட்டது.

பௌத்த பிக்குகள் சிறைத்தண்டனைகளை அனுபவித்த போது அவர்கள் தமது காவி உடையை அணிய அனுமதி வழங்கப்பட்டமைக்கான பல உதாரணங்கள் இருக்கின்றன. வரலாற்றில் பௌத்த பிக்குவான ஞானி ஒருவரை தீயிட்டு எரித்த போது, அவர் அணிந்திருந்த காவியை அணிந்துக்கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பௌத்த மத நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்காலங்களில் பௌத்த பிக்குகள் சிறையில் அடைக்கப்படும் போது பௌத்த மதத்திற்கு அவமதிப்பு ஏற்படும் என்று கருதி அவர்களே காவி கழற்றி கொடுத்து விட்டு தண்டனை அனுபவித்தனர்.

காவியை அணிந்துக்கொண்டு தண்டனையை அனுபவிக்க விரும்பினால், அதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். இதனால், இந்த சம்பிரதாயத்தை பாதுகாத்து, பௌத்த பிக்குகள் தமது அடையாளத்தை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும்.

முடிந்தால், சட்டத்திட்டங்களை மாற்றியாவது பிக்குகளுக்கு இந்த சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

எவ்வாறாயினும் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் காவியை கழற்ற முயற்சிப்பது தொடர்பான அரசாங்கத்தினர் செயற்பாடுகளை கண்டிப்பதாகவும் சோசலிச மக்கள் முன்னணி குறிப்பிட்டுள்ளது.

2 comments:

  1. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
    (அல்குர்ஆன் : 3:26)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. அப்படியென்றால் இந்துமத ஒரு பூசாரி,கிறிஸ்தவமத ஒரு பாதர் இவர்கள் ஏதோ ஒரு குற்றத்திட்காக சிறை அனுபவிக்கவந்தால் அவர்களின் ஆடைகளை எவ்வாறு தீர்மானிப்பது ஞானசார உண்மையான பௌத்தனாக இருந்தால் அந்த மததின் கண்ணியத்திற்குறிய ஆடையை கிழற்றிவிட்டு செய்த குற்றத்திட்காக சிறைச்சாலை ஆடையை அணிந்து கொண்டு தண்டனையை அனுபவிக்கவேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.