Header Ads



தமது கைகளையும், வாயையும் கட்டி வைத்துள்ளதாக ஐ.தே.க. பின்வரிசையினர் கோபம்

ஐ.தே.க பின்வரிசை எம்.பிக்கள் ஜனாதிபதி மீது மட்டுமன்றி கட்சித் தலைமை மீதும் கடும் அதிருப்தியில் உள்ளது. தங்களின் கைகளையும் வாயையும் கட்டி வைத்துள்ளதால் கடும் கோபத்தில் இருக்கும் அவர்கள் கட்சி மறுசீரமைப்பு தொடர்பில் அதிருப்தியில் உள்ளனர்.

தங்களுக்கு தனி குழுவாக செயற்பட இடமளிக்குமாறு சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் கட்சித் தலைமையிடம் கோரியுள்ளனராம். 16 சு.க குழு தனியாக செயற்பட்டு பிரதமரையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பது போன்று தங்களுக்கும் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சிக்க இடமளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக அறிய வருகிறது. 

இவர்களை சமாதானப்படுத்த கட்சி முயன்று வந்தாலும் இம்முறை பின்வரிசை குழு கடும் பிடிவாதமாக இருப்பதாக தெரிய வருகிறது. அரசிலுள்ள சு.க அமைச்சர்களை முன்னரை விட கூடுதலாக விமர்சிக்கவும் இவர்கள் தயாராவதாக அறிய வருகிறது.

1 comment:

  1. நல்லாட்சி தருவோம் என்று வந்தார்கள் ஆனால் இப்போது மக்களை பற்றி எந்த கவலையும் இல்லை. இரண்டு கட்சிகளும் ( UNP and MY3 அணி ) ஆளுக்கு ஆள் குற்றம் சுமத்துவதிலேயும் ஒருவருக்கு ஒருவர் குழி பறிப்பதிலுமே இருக்கிறார்கள். நம்மவர்களோ ராமன் ஆண்டாள் என்ன ராவணன் ஆண்டாள் என்ன நம்மட பங்கு நமக்கு கிடைச்சால் போதும் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். JVP கொண்டுவரும் 20 சட்ட திருத்தத்தை பற்றி எந்த கதையையும் காணோம். புத்தி ஜீவிகள் இந்த 20 வது சட்டத்திருத்தம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

    ReplyDelete

Powered by Blogger.