Header Ads



தேர்தல் கூட்டணி, பேச்சுக்கள் ஆரம்பம்

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டாக தேர்தல்களில் போட்டியிடுவது சம்பந்தமாக இருதரப்பிலும் ஆழமாக ஆராயப்பட்டுவருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரிவித்துள்ளன.

சமகால அரசியல் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கூட்டரசிலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேரும் கூட்டு எதிரணியுடன் கைகோத்து, மஹிந்தவால் அறிவிக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்தால் மைத்திரி அணி கடும் சீற்றத்தில் இருக்கின்றது.

மறுபுறத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்களை தம்பக்கம் வளைத்துப்போடுவதில் மஹிந்த அணி குறியாக இருப்பதாலும், ஆட்சியை கொண்டு நடத்துவதற்கு இடமளிக்காது குழப்பங்களை ஏற்படுத்துவதாலும் ஐக்கிய தேசியக் கட்சியும் எதிரணிமீது கடும் அதிருப்தியிலேயே இருக்கின்றது.

இந்நிலையிலேயே எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபை மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் கூட்டணியாக போட்டியிடுவது தொடர்பில் இரு பிரதான கட்சிகளும் கவனம் செலுத்தியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்குமிடையே கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின்போதும் இவ்விவகாரம் குறித்து பேசப்பட்டுள்ளது.

தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது பற்றி ஆராய்வதற்காக இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களால் முன்வைக்கப்படும் அறிக்கையின் பிரகாரமே முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாகாண சபை மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் பலமானதொரு கூட்டணியை அமைத்து தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்கவுள்ள மஹிந்த அணியின் வியூகத்தை முறியடிப்பதற்காகவே ஆளுந்தரப்பில் மேற்படி திட்டத்தை வகுக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.கவின் யானை சின்னத்தின்கீழேயே இக்கட்சிகள் போட்டியிட்டன.

எனவே, அடுத்துவரும் தேர்தல்களில் மேற்படி கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பொதுச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்துக்கு ஐ.தே.க. வரவேண்டும் என்றும், மாகாண சபைத் தேர்தலில் சு.கவுடன் கூட்டணி அமைக்கமுடியாத பட்சத்தில், ஜனாதிபதித் தேர்தலிலாவது இருதரப்பும் இணைந்தே களமிறங்கவேண்டுமெனவும் ஐ.தே.க. செயற்பாட்டாளர்களால் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றுள்ளது.

2 comments:

  1. Borh will go to drain
    Without give the leadership to sajith premadasa.no body wont to nelieve ranil my3 yakapalana.

    ReplyDelete
  2. முஸ்லிம்களை பொறுத்தவரையில் இருவருமே ஒன்று , அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டார்கள் , ஓட்டு போட முன்பு நபரின் தகுதி ஆளுமை அறியாமல் இருப்பது மடமை அதனால் முஸ்லீம் ஏமாறுகிறான் , அடிபடுகிறான் , நஷ்டவாளியாகிறான்

    ReplyDelete

Powered by Blogger.