Header Ads



சவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி


2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை செய்­வ­தற்கு கட்­டாரின் பொரு­ளா­தார மற்றும் வர்த்­தக அமைச்சு தடை விதித்­துள்­ளது.

குறித்த நான்கு நாடு­க­ளி­னாலும் தயா­ரிக்­கப்­பட்ட அனைத்துப் பொருட்­க­ளையும் கடை­க­ளி­லி­ருந்து நீக்­கு­மாறு நாடு­மு­ழு­வ­தி­லு­முள்ள அனைத்துக் கடை­க­ளுக்கும் கடந்த சனிக்­கி­ழமை அமைச்சு வேண்­டுகோள் விடுத்­தது.

கடந்த 2017 ஜுன் மாதம் சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு அமீ­ரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடு­க­­ளினால், ரியா­தினால் சோடி­க்­கப்­பட்­ட­தாக பர­வ­லாக நம்­பப்­படும் குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் கட்­டா­ரு­ட­னான இரா­ஜ­தந்­திரத் தொடர்­புகள் துண்­டிக்­கப்­பட்­டன. கட்டார் பயங்­க­ர­வா­தத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தா­கவும், பிராந்­தி­யத்தை ஸ்திரத்­தன்­மை­யற்­ற­தாக மாற்­று­வ­தா­கவும் குறித்த நான்கு நாடு­க­ளி­னாலும் கட்டார் மீது குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வை­க­்கப்­பட்­டன. இக் குற்­றச்­சாட்­டுக்­களை தோஹா உறு­தி­யாக மறுத்­துள்­ளது.

சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளுக்கும் ஆத­ர­வ­ளிக்கும் வகையில் பல ஆபி­ரிக்க நாடுகள் கட்­டா­ரு­ட­னான தொடர்­பு­களைத் துண்­டித்துக் கொண்­டன.

குறித்த சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­களும் கட்­டா­ருக்கு நிபந்­த­னைகள் அடங்­கிய பட்­டி­ய­லொன்றை வழங்­கி­ய­தோடு அதற்­க­மைவாக செயற்­பட வேண்டும் எனவும் இல்­லா­விட்டால் அதன் விளை­வு­களை எதிர்­கொள்ள வேண்டும் எனவும் தெரி­வித்­தி­ருந்­தன. இந்த நிபந்­த­னை­களுள் தோஹாவைத் தள­மாகக் கொண்­டுள்ள அல்-­ஜெ­ஸீரா ஊடக நிறு­வ­னத்தை மூட வேண்டும், கட்டார் மண்­ணி­லி­ருந்து துருக்­கியத் துருப்­புக்­களை அகற்ற வேண்டும், ஈரா­னு­ட­னான தொடர்­புளைக் கைவிட வேண்டும் எகிப்தின் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்­கத்­து­ட­னான தொடர்­பு­களை முடி­வுக்குக் கொண்­டு­வ­ர­வேண்டும் போன்ற நிபந்­த­னை­களும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன.

நான்கு நாடு­க­ளி­னதும் வான் பரப்பை பயன்­ப­டுத்த முடி­யா­த­வாறு கட்டார் விமா­னங்­க­ளுக்கு தடை உள்­ள­டங்­க­லான பல தடைகள் கட்டார் மீது நான்கு நாடு­க­ளி­னாலும் விதிக்­கப்­பட்­டன. கட்­டா­ருக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் சவூதி அரே­பியா தனது சிறிய அண்டை நாடு­ட­னான தரை­வழிப் பாதையை முற்­றாக மூடி­யது. இந்த வழி­யூ­டா­கவே கட்­டாரின் பெரும்­பா­லான உணவுப் பொருட்­களின் விநி­யோ­கங்கள் இடம்­பெற்று வந்­தன.

எனினும் நிபந்­த­னை­க­ளுக்கு அடி­ப­ணிய மறுத்த கட்டார், நியா­ய­மற்ற இந் நிபந்­த­னைகள் தனது நாட்டின் இறைமை மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் எனத் தெரி­வித்து அவற்றை நிரா­க­ரித்­தது. இதற்குப் பதி­லாக அந்த நான்கு நாடு­களும் மேலும் தடை­களை விதிக்­க­வுள்­ள­தாகத் தெரி­வித்­தன.

கட்டார் மீதான தடை­களைத் தொடர்ந்து ஈரானும் துருக்­கியும் தமது வான் பரப்­புக்­க­ளையும் வர்த்­தக வழி­க­ளையும் கட்­டா­ருக்­காக திறந்து விட்­ட­தோடு, அந்த அரபு நாட்­டுக்கு அவ­சி­ய­மான உண­வு­க­ளையும் ஏனைய அவ­சி­ய­மான பொருட்­க­ளையும் வழங்­கின.  சவூதி தலை­மை­யி­லான நாடு­களால் கட்டார் மீது விதிக்கப்பட்ட தடைகளால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மறைந்து வருவதாக கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில் டோஹாவினை அடிபணியச் செய்வதற்கு காத்திருந்த சவூதியின் எதிர்பார்ப்புகளுக்கு விழுந்த அடியாகவும் இது பார்க்கப்படுகின்றது.

M.I.Abdul Nazar

No comments

Powered by Blogger.