Header Ads



சர்வதேச சமூகத்திடம், இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின் கோரிக்கை

காஸாவில் அப்பாவி பலஸ்தீனர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாஹுவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், ஐக்கிய அமெரிக்க அரசும் பொறுப்புக் கூற வேண்டும் என முஸ்லிம் இயக்கங்களின்  கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில் தெரிவிக்கின்றது.

இஸ்ரேலிய ஆயுதப்படையினர் காசாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து முஸ்லிம் கவுன்ஸில் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

55க்கு மேற்பட்ட பொது மக்களைக் கொலைசெது பிள்ளைகள், பெண்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை முஸ்லிம் கவுன்ஸில் வன்மையாகக் கண்டிக்கின்றது. 55 பேர்களுக்கு மேற்பட்டோரைக் கொன்று 1500க்கு மேற்பட்ட சிவிலியன்களை காயத்துக்கள்ளாக்கி பலஸ்தீனியர்களது பெருமளவு சோத்துக்களுக்கு நாசமேற்படுத்திய இந்தக் கொடூரங்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பிரதமர் நெதன்யாஹும் நேரடியாகப் பொறுப்புக் கூற வேண்டும்.

மனிதத்துவத்துக்கு எதிரான இந்த மனித அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்குமாறு முஸ்லிம் கவுன்ஸில் சர்வதேச சமூகத்தைக் கோருவதோடு மனிதத்துவத்துக்கு எதிரான இந்த குற்றத்துக்குப் பொறுப்பான இரு தலைவர்களையும் யுத்த குற்றத்திற்காக சர்வதேச நீதிமன்றத்துக்கு மன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்வதோடு, காஸா படுக்கையிலிருந்து இஸ்ரேல் படையினரை வாபஸ் செது பலஸ்தீனிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அழிவு மற்றும் வன் செயல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் முஸ்லிம் கவுன்ஸில் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கிறது.

ரஷ்யா மற்றும் மத்திய கிழக்குத் தலைவர்கள் முஸ்லிம் நாடுகள் ஐரோப்பிய யூனியன், கனடா, அவுஸ்திரேலியா போன்ற கூட்டு நாடுகளுக்கு பலஸ்தீன் மண்ணிலிருந்து இஸ்ரேல் படையினரை வாபஸ் பெறச் செது பலஸ்தீனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண அழுத்தம் கொடுக்குமாறும் முஸ்லிம் கவுன்ஸில் விடுத்த வேண்டுகோளில் கேட்டுள்ளது.

2 comments:

Powered by Blogger.