Header Ads



நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போகிறேன் - பிரதமர்

இலங்கை நல்லிணக்கம், சமாதானத்தை பலப்படுத்தும் புதிய நிகழ்ச்சிநிரலுடன் முன்னோக்கி செல்லும் என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க கண்டியில் பௌத்தமதகுருமாரிற்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.

கண்டியில் இன்று -18- பௌத்தபீடாதிபதிகளை சந்தித்து நாட்டின் தற்போதைய அரசியல் நிலை குறித்து பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் எதிர்கால திட்டம் குறித்து பௌத்தமத தலைவர்களுடன் ஆராய்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அறிமுகப்படுத்திய பல திட்டங்கள் மூலம் நன்மையை பெறுவதற்கான தருணம் இதுவென தெரிவித்துள்ள பிரதமர் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பல திட்டங்களை பூர்த்திசெய்ய உள்ளதாகவும் புதிய திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் நாட்டிற்கான புதிய திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் நாடு எதிர்நோக்கியுள்ள பல இயற்கை அனர்த்தங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த வருடம் இயற்கை அனர்த்தங்களை சந்திக்காது என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.