Header Ads



பூஜாப்பிட்டிய பிதே சபையின் தலைவராக அனுர பிரனாந்து, உப தலைவராக ஏ.எல்.எம்.ரஸான்


-JM-Hafeez-

பூஜாபிட்டிய பிரதேச சபையின் புதிய தலைவராக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அனுர பிரனாந்தும் உப தலைவராக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஏ.எல்.எம்.ரஸானும் தெரிவாகினர்.  (இன்று 23.4.2108 ம் திகதி)

பூஜாபிட்டிய  பிரதேச சபையின் புதிய தலைவரையும் உப தலைவரையும்தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பூஜாபிட்டிய  பிரதேச சபைக் கூடத்தில்   மத்திய மாகாண  உள்ளூராட்சி ஆனையாளர் மேனக ஹேரத் தலமையில் இடம்பெற்றது.

முதலில்  புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான பெயர்களை மும்மொழியுமாரு உள்ளுராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டார். அதற்கு இணங்க  ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னனியின் உறுப்பினர் அனுர பிரனாந்துவின் பெயரை உறுஞப்பினர் சம்பத் தர்மபிரிய மும்மொழிய, உறுப்பினர் லக்ஷ்மன் தொலபிஹில்ல வழி மொழிந்தார்.

அவருக்குப் போட்டியாக  ஐக்கிய தேசிய கட்சி சார்பில்  சுரஞ்ஜித் குமார விக்கிரமசூரியவின்  பெயரை ரம்சான் மொஹமட் மும்மொழிய,  சுனில் கொட்டுகொடெல்ல வழிமொழிந்தார்.

தலைவர் பதவிக்கு இரு பெயர்கள் மும்மொழியப்பட்டுள்ளமையால் வாக்கெடுப்பு ஒன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டதுடன் இது திறந்த வாக்கெடுப்பாக இடம்பெற்றது. அதன்போது  ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னனியை சேர்ந்த அனுர பிரனாந்து 17 வாக்குகளையும் ஐக்கியதேசிய கட்சியை சேர்ந்த சுரஞ்சித் குமார விக்கிரமசூரிய 8 வாக்குகளையும் பெற்றதனால், அனுர பிரனாந்து புதிய தலைவராகத் தெரிவானார்.

ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னனியுடன் இனணந்து ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியும் வாக்களித்து.

அதேநேரம் எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கியதேசிய கட்சி வேட்பாளருக்கு அக்கட்சியின்  8 உறுப்பினர்களது வாக்குகள் மட்டுமே  கிடைத்தது.

அதன் பின் உப தலைவர் தெரிவு இடம்பெற்றது. அதில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்தர் ஏ.எல்.எம். ரஸானின் பெயரை  ஶ்ரீ லங்காபொது ஜன முன்னனியின் சம்பத் தர்மப்பிரிய  மும்மொழிந்த போது ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர் சுரஞ்சித் குமார விக்கிரமசூரிய தமது கட்சிக் வாக்களிக்காது  சபையை விட்டு வெளியேற  அனுமதி தருமாரு கேட்டார். அது அவரவர் சுய விருப்பம் என  ஆணையாளர்தெரிவித்துடன்  ஐக்கியதேசிய கட்சியின் 8 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் 4 உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேரினர்.

அதன் பின் ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னனியின் உறுப்பிளர்களும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னனியின் உறுப்பினரும் சபையில் இருந்தனர். உப தலைவரை தெரிவுசெய்வதற்கான சபையின் கோரம்  போதுமான அளவு இருப்பதாகத் தெரிவித்த ஆணையாளர் உப தலைவரை தெரிவு செய்யுமாரு வேண்டிக்கொண்டார். அதன்படி  ஏற்கனவே மும்மொழியப் பட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஏ.எல்.எம்.ரஸானின் பெயரை அஜித் சமரதுங்க வழிமொழிந்தார். உப தவைர் பதவிக்குவேரு பெயர்கள் மும்மொழியாததால் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏ.எல்,எம். ரஸான் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

No comments

Powered by Blogger.