Header Ads



இலங்கை ஜனாதிபதியாக, நரேந்திர மோடி

இலங்கை மற்றும் இந்திய ஆட்சித் தலைவர்கள் தொடர்பில் உலக புகழ்பெற்ற செய்தி சேவையான பிபிசி குழப்பமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்பிலேயே இந்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு லண்டனில் நடைபெற்றது. இதன்போது மாநாடு தொடர்பில் இடம்பெற்ற நேர ஒளிபரப்பின் போது பிபிசி செய்தியாளர்கள் தவறான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி Buckingham மாளிகைக்கு வந்திறங்கியுள்ளார் என ஒளிபரப்பாளர் கூறும் போதும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மாளிகைக்கு வந்திறங்கியுள்ளார்.

தங்கள் தவறுகளுக்காக வருந்துவதாகவும், அன்று பணியில் இருந்தவரினால் தவறான தகவல் வழங்கப்பட்டு விட்டதாகவும், பிபிசி செய்தி சேவை மன்னிப்பு கோரியுள்ளது.


3 comments:

  1. Mythri or Modi doesn't matter Both are same SHIFT OF of Asia.
    Came to power to destroy the beautiful Countries... We are unlucky people of that countries..

    ReplyDelete
  2. இதில் ஒன்றும் பெரிய தவறு இருப்பதாகத் தெரியவில்லை ஒரு விஷயத்தில் இருவரும் ஒருவரே

    ReplyDelete
  3. yes both are enemy of Muslims

    ReplyDelete

Powered by Blogger.