Header Adsயூ டியூப் மீது, நசீம் அக்தாம் சூடு நடத்தியது ஏன்..?


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட பெண் குறித்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்திலுள்ள யூடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் 3 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அப்பெண் தன்னை தானே சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்டார்.

குறித்தபெண் யார் என்ற தகவல் இதுவரை தெரியாத நிலையில் அப்பெண் குறித்த தகவலை அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

சன் டியாகோ மாகாணத்தில் வசித்து வந்த 36 வயதான நசீம் அக்தாம் என்பவர் தான் குறித்த தாக்குதலை முன்னெடுத்தவர்.

குறித்த நபர் உடற்பயிற்சிகள், பாரசீக கலாச்சாரம், சைவ உணவு உள்ளிட்டவற்றை யூடியூப்பில் வீடியோவாகப் பதிவிட்டு வந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் வெளியிட்டுள்ள ஒரு காணொளி பதிவில், அவருடைய வீடியோவுக்கு யூடியூப் நிறுவனம் பாகுபாடு காட்டியதாகவும், பெரும்பாலான வீடியோக்கள் பார்வையாளர்களைச் சென்றடையாமல் யூடியூப் நிறுவனம் செய்ததாக தனது NasimeSabz.com என்ற பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

மேலும் அதில் யூடியூப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் விளம்பரப் பணத்தைச் சுரண்டுவதாகவும் யூடியூப் சமமான வளர்ச்சியை அளிப்பதில்லை போன்ற பதிவுகள் இடம் பெற்றிருந்தன.

மட்டுமின்றி மிருகவதை தடுப்பு குறித்தும் அவர் பல்வேறு காணொளிகளை பதிவேற்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை யூடியூப் கணக்கை அவர் செயலிழக்கச் செய்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

யூடியூப் நிறுவனத்தின் மீது இருந்த கோபத்தினால் நசீம் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று அவரது தந்தையும் விசாரணை அதிகாரிகளிடம் கூறி இருக்கிறார்.

தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விசாரணை அதிகாரிகள் இது தீவிரவாத தாக்குதல் அல்ல என்று கூறியுள்ளனர்.

7 comments:

 1. ஒரு முஸ்லீம் பெண் செய்த தீவிரவாத தாக்குதலை நியாயப்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. இன்னும் எதிர்காலங்களில் உங்கள் சமூகத்தை வன்முறைகளுக்கு இட்டு செல்லும்.

  ReplyDelete
 2. முஸ்லிம்களுக்கு எதிராகவே எந்த நேரமும் இனவாதம் பேசும் தமிழ் பெயர் கொண்ட பேர்தாங்கி தமிழர்கள் சில விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் தேவையாற்ற விடய்ங்களுக்கு பதிவிட்டு இரு சமுகங்களையும் பிரிக்க முணைய வேண்டாம் நாம் இரு சமுகமும் ஒன்றாய் இணைந்து சாதிக்க வேண்டிய விடயங்கள் பல உள்ளன. முஸ்லிம்கள் மீது தற்போதுள்ள வெறுப்பு முன்னரும் 1915ல் இருந்தது அப்போது தமிழர்கள் என நாம் ஒன்றா இணைந்து செயற்படாத காரணத்தினால் மற்றும் சில தமிழ் தலைவர்கள் அந்த இனவாதிகளுக்ககா வாதாடியதாலும் அவர்கள் பாதுகாக்கப்பட்டனர் எனினனும் அந்த இனவாதிகள் தமிளர்கள் மீது பாய்ந்தனர் அதைவிடவும் வீரியமாக ஆகவே தமிழர்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் நாம் இரு சமூகமாக இருந்நதலும் நாம் ஓர் இனம் ஆகவே முஸ்லிம்களின் ஊடகங்களில் வேண்டு மென்றே புகுந்து இனவாத கருத்துக்களைப் பதிவிட வேண்டாம்

  ReplyDelete
 3. இஸ்லாமிய பார்வயில் இப்பெண்ணின் செயலோ, மறணமோ மோசமானது. ஒருமுஸ்லீம் பெயெரை அவர்தாங்கிவந்ததும் அறிவுரை சொல்லும் அளுக்குண்ணிகள்; துப்பாக்கி ரவைகளை மாதக்கணக்கில் வாங்கி சேகரித்து நூற்றுக்கணக்கானோரை கொண்ரவனுக்கோ, பண்டயகாலத்தில் சொந்த சமூக பெண்களுக்கே முலைவரி வசூலித்து, முடியாதெண்றால் மு... காட்டித்திரியச்சொல்லி இன்றும் உயர் , தாழ் சாதி பேதம் பேசி கொலைவெறியாடும் உம்சொந்த சமூகத்தை போய் திருத்தும்... இண்று நடக்கும் கொலைகளை பேச துப்பில்லை மற்றசமூகத்துக்கு அறிவுரை?

  ReplyDelete
 4. How are you Psyco..Anusath. Now a days you are too much getting sick.

  ReplyDelete
 5. Anusath may be a hired person by some extremist and hardliners. so, we have ignore him and his comments.....

  ReplyDelete
 6. விசாகபெருமாள் உமாபதி ஐயா, நீங்கள் கவலைப்பட வேண்டாம் ஐயா. நாங்கள் அனுசாத் போன்ற அரை வேற்காடுகளின் கருத்துக்களை கணக்கில் எடுப்பதில்லை. முஸ்லிம்களுக்கெதிராக பேசுவது அவருக்கு இன்பமாக இருந்தால் அவர் பேசிக்கொள்ளட்டும் அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை.

  ReplyDelete

Powered by Blogger.