Header Ads



சத்திர சிகிச்சைகூடம் திறந்த முதல்நாளில் 8 சத்திர சிகிச்கைகளை செய்து, டாக்டர் சனூஸ் காரியப்பர் சாதனை


சாய்ந்தமருது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடம் திறந்து வைக்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் நிகழ்வு இன்று (26) புதன்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது வைத்தியசாலை வைத்திய அதிகாரி எம்.எம்.எஸ்.ஜெசீலுல் இலாஹி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள் சனூஸ் காரியப்பர், எம்.ஏ.சீ.எம்.அமீன், மஸாயா சமட், நினா இர்சாத், வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளரும், சமுர்த்தி உதவி முகாமையாளருமான றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர்களான ஓய்வுபெற்ற விவசாய போதனாசிரியர் எம்.ஆதம், விவாகப் பதிவாளர்எம்.எம்.உதுமாலெவ்வை, பொருளாளரும் ஓய்வுபெற்ற முன்னாள் சாய்ந்தமருது ப.நோ.கூ.சங்க பொது முகாமையளருமான ஐ.எல்.எம்.றாசீக், உதவிச் செயலாளரும் கல்முனை மாநகர சபை உத்தியோகத்தருமான யூ.கே.காலிதீன், உறுப்பினர்களான விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்  நௌபர் ஏ. பாவா, சிரேஷ்ட ஊடகவியலாளர்எம்.ஐ.எம்.சம்சுதீன் உள்ளிட்ட தாதிய உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.எம்.எஸ்.ஜெசீலுல் இலாஹியின் வழிகாட்டலினால் வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் ஒத்துழைப்பினால்  சத்திர சிகிச்சையில் பல வருடம் அனுபவமுள்ள வைத்தியர் சனூஸ் காரியப்பரின் முயற்சியினால் இச்சத்திர சிகிச்சை கூடம் திறந்து வைக்கப்பட்டு சிறிய ரக சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

சாய்ந்தமருது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட இன்றைய முதல் நாளில் 8 சிறிய ரக சத்திர சிகிச்கைகளை வைத்தியர் சனூஸ் காரியப்பர் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(றியாத் ஏ. மஜீத்) 




2 comments:

Powered by Blogger.