Header Ads



50 கோடி ரூபா வரி செலுத்தி, மீண்டும் ஆரம்பம்

ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரின் உதவியினால் மூடப்பட்டிருந்த மதுபான உற்பத்திசாலையின் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உற்பத்தி வரி செலுத்தப்படாமையினால் இந்த உற்பத்திசாலை கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்தது.

சுமார் ஐம்பது கோடி ரூபா உற்பத்தி வரியை இந்த அமைச்சர் செலுத்தி, தடைப்பட்டிருந்த உற்பத்திப் பணிகளை மீள ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த உற்பத்திசாலையில் மதுபானத்தை போத்தல்களில் அடைப்பது, லேபள்களை ஒட்டுதல் ஆகிய பணிகளில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இது மதுவரிச் சட்டத்திற்கு புறம்பானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்களத்தில் கடமையாற்றி வரும் சிரேஸ்ட அதிகாரியொருவர் இது பற்றி கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமாகவிருந்த மெண்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் பணிகளே இவ்வாறு மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

1 comment:

  1. Buddhist Country Buddhist Drinking Factory open hooray....
    Buddhist Country Also Gambling allowed
    Buddhist Country Brothel Allowed.
    Buddhist Country Only Cutting cow/Bull for Food/eating Prohibited/Haraam...
    What a Wonderful Buddhist Country....

    ReplyDelete

Powered by Blogger.