Header Ads



IPL இல் நடுவரின் தீர்ப்பை, மறுபரிசீலனை செய்யும் DRS முறைமை அறிமுகம்


இந்தியன் பிரீமியர் லீக் ( IPL) இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் DRS முறைமை இந்த வருடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் DRS முறைமை கடந்த சில வருடங்களாகவே நடைமுறையில் உள்ளது.

எனினும், இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் DRS முறைமை அமுல்படுத்தப்படவில்லை.

DRS முறைமைக்கு இந்திய கிரிக்கெட் சபை ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.

எவ்வாறாயினும், இவ்வருடம் நடைபெறும் 11 ஆவது IPL அத்தியாயத்தில் DRS முறைமையை அறிமுகப்படுத்த ஏற்பாட்டுக் குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

இதனூடாக வீரர்களின் ஆட்டமிழப்பு குறித்து துல்லியமாக அறிந்துகொள்ள முடிவதுடன், அநீதி இழைக்கப்படுவதனைத் தடுக்க முடியும் என்பதே நம்பிக்கையாகும்.

இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது அத்தியாயம் அடுத்த மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.