Header Ads



பேரழிவில் இருந்து, பள்ளிவாசலை பாதுகாத்தோம் - மத்திய மாகாணத்தில் இன்று ஒலித்தவை

.JM.Hafeez-

கொலைக்கு காரணமாக உள்ளவர்கள் எனச் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் பிணை வழங்கி உள்ளதாக மேற்கொண்ட போலிப் பிரசார யுத்தியே  தெல்தெனியாவில் வன்முறை ஆரம்பமாவதற்கு போலிக்காரணமாக அமைந்திருந்தாகவும் இதற்குப் பங்களிப்புச் செய்த முகப்புத்தகங்கள் தடைசெய்யப்பட்டமை ஒரு நல்ல விடயம் என மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார். (20.3.2018) 

மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு பல்லேகலை மாகாண சபை கட்டிடத் தொகுதியில் இடம் பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவிததார். சபைத் தலைவர் எல்.டி. நிமலசிரி தலைமையில் நடை பெற்ற இவ் அமர்வில் அவர் மேலும் தெரிவித்தாவது-

கடந்த பெப்ரவி 23ம் திகதி நடந்த சம்பத்துடன தொடாபுடைய நால்வரும் கூன்று தினங்களுக்குள் கைது செய்யப்பட்டு பிணையின்றி தடுப்புக்காவலில்  வைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக போலீப் பிரசாரத்தை மேற்கொண்டு வன்முறைகளைத் தூண்டியதாக  அறிய முடிகிறது.  தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது என்னுடன் உரையாடிய பல சிங்கள சகேதரர்கள் தாக்குதல் மேற்கொண்ட கொலையாளிகளுக்கு பிணை வழங்கியுள்ளார்களே அது தவறல்லவா? என்றே குற்றம் சாட்டினர். ஆனால் அப்படியல்லாது அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்ட்டிருந்தமைதான் உண்மை. இதனை சில ஊடகங்களும் மறைத்தே செய்தி வெளியிட்டன. 

நாட்டில் போக்குவரத்துக் குற்றஙகள் எந்த நாளும் நடந்த வண்ணம் இருக்கும் போது குறிப்பிட்ட ஒரு கொலைக்கு மட்டும் பல வருடங்கள் உழைத்த செல்வம் அனைத்தையும் ஒரு மணி நேரத்தில் தீயிட்டுக் கொழுதத வேண்டும்? முஸ்லிம்கள் நாட்டைத் துண்டாடிக் கேட்கவில்லையே. நல்லாட்சியில் ஏன் அடிக்கிறார்கள் எனக் கேட்கிறார்கள். இதற்காக நாம் வெட்கப் படுகிறோம். 

எனவே இதில் ஏதோ அரசியல் கலப்படம் இருப்பது தெரிகிறது. நடந்த சம்பவத்தில் 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பள்ளிகள் 65 வாகனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 28 பேர் காயமடைந்துள்ளனர். 280 பேர் கைது செய்யப்படனர். 

2009ம ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது மகிந்த ராஜபக்ச நாட்டில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று ஒன்று இல்லை என்றார். அப்படியாயின் சிறுபான்மை என்று தேடித் தேடி ஒரு இனம் மட்டும் தாக்கப்பட முடியாது. 30ற்கும மேற்பட்ட காலம் யுத்தம் நடந்தது. அதில்அ பௌத்தர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த சம்பவங்களில் ஒன்றுதான் ஸ்ரீ தலதா மாளிகை தாக்கப்பட்டமை. ஆன்று 10 வயதிலும் குறைவாக இருந்த சிறுவர்கள்தான் இன்று 18 வயதை அடைந்துள்ளனர். அன்று நாட்டில் என்ன நடந்தது என்று தெரியாத கடைக்குட்டிகளுக்கு இன்று வயது 15 முதல் 15 வரையுள்ளது. கண்டி மாவட்ட தாக்குதலில் பங்கு கொண்டவரகள் அனைவருமே மேற்சொன்ன 15- 25 வயதை உடையவர்கள்தான். 

எனவே ஒரு சிறிய குழு செய்த வேலையாக நாம் கூறினாலும் மொத்த நட்டம் 8850 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. மேற்படி 8850 மில்லியன் ரூபாயை அல்லது 885 கோடி ரூபாய்களை சாதாரண பொதுமக்கள்தான் செலுத்தவேண்டியுள்ளது. பெருந்தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் ஒரு வசதி குறைந்த பெண்மணியும் இதற்கு வரி செலுத்த வேண்டியுள்ளது. அந்த அப்பாவிப் பெண் ஏன் இதற்கு வரி செலுத்த வேண்டும். எனவே யார் செய்தார் என்பதல்ல பிரச்சினை. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். 

இங்கு உரையாற்றிய சாந்தினி கோன்கஹகே தெரிவித்ததாவது-

நான் குண்டசாலை பிரதான பாதையால் செல்லும் போது நத்தரம்பொத பிரதேசத்தில் உணவு வகைகளைக் கொள்வனவு செய்ய வாகணத்தை நிறுத்துவேன். அந்த இடத்தில்  ஒரு சதுர அடிக்கும் அதிகமான அளவில் ஒரு எழுத்தைக் கொண்ட பாரிய போர்ட் மாற்றப்பட்ட மகாசோன் பலகாயவின் தலைமையகத்தை கண்டுள்ளேன். இது ஏன் பொலீசாருக்கு தென்படவில்லை. பொலீசாரும் உளவுப் பிரிவும் எப்போதே விழித்திருக்க வேண்டும். அப்படியாயின் பாரிய அழிவையும் அவப் பெயரையும் தடுத்திருக்க முடியும். 

சட்டத்தரணி சுனில் அமரதுங்க தெரிவித்தாவது-

மெனிக்கின்னையில் தாக்குதல் ஆரம்பித்த போது நான் எனது மெனிக்கின்னை வீட்டில்தான் இருந்தேன். சுமார் 15 முதல் 25 வயது மதிக்கத்தக்க இனம் வயதினர்தான் தடிகளுடனும் கற்களுடனும் முகத்தை மறைத்துக் கொண்டு காணப்பட்டனர். அவர்களை என்னால் இனம் காணமுடியாதிருந்தது. 

பொலீசாரினால் சமாளிக்க முடியாத அளவு கூட்டம் இருந்தது. எனவே இராணுவம் அழைக்கப்பட்டு நான்கு மணித்தியாலங்களாக ஆகாயத்தை நோக்கி வேட்டுக்கள் தீர்கப்பட்டது. துப்பாக்கி வேட்டு மழை பொழிந்தே மெனிக்கின்னை நகரையும் பள்ளியையும் பேரழிவில் இருந்து பாதுகாத்தோம். இருதரப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வாறு துப்பாக்கியை கையாள வேண்டி வந்தது என்றார்.  

No comments

Powered by Blogger.