கப்பல் + கார்கள் மூழ்கடிக்கப்பட்ட, ஆழ்கடலில் என்ன நடக்கும்..?
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்களை ஏற்றிவரும் கப்பல் ஒன்று மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய குண்டு துளைக்காத 8 வாகனங்கள் ஆகியவற்றை தாம் கடலில் மூழ்கடித்து ஜலசமாதி செய்ததாக இன்று இலங்கை படையினர் அறிவித்துள்ளனர்.
இந்த எட்டு வாகனங்களும், புலிகளின் கப்பலும் இலங்கைக்கு மேற்குப் புற கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கே. கே. சி. உதயங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலுடன் சேர்த்து 8 குண்டு துளைக்காத வாகனங்களும் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதிகளான ஜே. ஆர். ஜயவர்த்தன, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய வாகனங்களே இவையாகும்.
இவர்கள் உட்பட இன்னும் பலர் பயன்படுத்திய பழுதடைந்த சுமார் 25 வாகனங்கள் இவ்வாறு நிர்மூலம் செய்யப்படுவதற்கு காத்திருக்கின்றன.
ஆழ்கடலில் இந்த கப்பல் மற்றும் வாகனங்கள் மூழ்கடிக்கப்பட்ட பகுதியில் அவை, சிப்பிகள் உட்பட கடல் வாழ் உயிரினங்களை ஈர்க்கும் என்றும் விரைவில் அந்தப் பகுதியை ஒரு சுற்றுலாப் பயணத்துக்கான இடமாக மாற்ற முடியும் என்றும் படையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
- BBC - Tamil
Stupidity Overloaded!
ReplyDeleteWhy did not they make a museum for these cars and ship and charge few Rupees for tickets or sell as souvenir item.
ReplyDeleteஇனுப்பு இல்லாத ஊருக்கு இலுப்பப் பூ சக்கரையாம்
ReplyDelete