மிகவும் கஷ்டமான நிலைமையில், பிரதமர் இருக்கின்றார் - மகிந்த
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட தயாராக இருந்த போதிலும் அதில் கையெழுத்திட வேண்டாம் என தான் ஆலோசனை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
திவுலப்பிட்டிய பிரதேச சபை கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
எமது பிரதமர் மிக சிறந்த திறமைசாலி என எண்ணிக் கொண்டிருந்தவர்கள், அவருக்கு வேலை செய்ய முடியாது எனக் கூறி கையெழுத்திட்டுள்ளனர். பிரதமர் மிகவும் கஷ்டமான நிலைமையில் இருக்கின்றார் என நான் நினைக்கின்றேன்.
ஐக்கிய தேசியக் கட்சியினரும் கையெழுத்திட தயாராக இருந்தனர். கையெழுத்திட வேண்டாம் என நாங்கள் ஆலோசனை வழங்கினோம். இருபது பேர் கையெழுத்திட்டால் போதும்.
ஜனாதிபதி தற்போது என்ன நடவடிக்கை எடுக்க போகின்றனர் என்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
பிரதமர் மீது இன்னும் நம்பிக்கை உள்ளதா இல்லையா என்பதை ஜனாதிபதி காண்பிக்க வேண்டும். வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
பிரதமரின் பொறுப்பின் கீழ் இருந்த இலங்கை மத்திய வங்கி மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தை பிரதமரின் பொறுப்பில் இருந்து அகற்றியுள்ளார்.
பிரதமர் மீது ஜனாதிபதிக்கும் நம்பிக்கையில்லை என்பது இதில் இருந்து தெளிவாகியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சிங்கள புது வருடத்துக்கு (14.04.2018) முன்பு UNP ல் மறுசீரமைப்பு இடம்பெறும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், எப்படியாவது UNP mp களது ஆதரவுகளை 04 ம் திகதி தனக்கு சாதகமாக பெறுவதர்க்கு அவர் முயற்சிக்கிறார்.
ReplyDeleteஆகையால், நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பினை எதிவரும் 14.04.2018 திகதிக்கு பின்னர் ஒரு தினத்தில் பாராளுமன்றத்தில் வாக்கெடுபுக்கு விட்டால் நிலமை அதோகதியாக இருக்குமாக்கும்.