Header Adsமகிந்த அணி, ஹக்கீமுடன் தீவிர பேச்சு - ஐ.தே.க. யுடன் பயணிப்பது மிகவும் கஷ்டமான காரியமாம்..!

நாங்கள் வெற்றியீட்டிய சபைகளில், எங்களை புறந்தள்ளிவிட்டு, மாற்று அணிகளுடன் ஐ.தே.க. ஆட்சியமைத்தால், அரசியல் ரீதியாக அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

“எங்களுக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளைப் பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கடினமான விடயம்” எனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு, கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று (23) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்‌றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

“நாங்கள் கடந்த 3 வாரங்களாக சிறிகொத்தாவில் ஐ.தே.க. முக்கியஸ்தர்களை சந்திந்து பேசிவந்த விவகாரங்களையும் பின்னர் நடந்த விபரீதங்களையும் வைத்து பார்க்கின்றபோது, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு மிகவும் கடினமான விடயம் என்பதை மிகவும் வேதனையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

“உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாங்கள் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட நிலையில், எங்களுக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளால் அவர்களுடன் தொடர்ந்து பயணிப்பதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

“இப்படியான சூழ்நிலையில் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் சவாலுக்குரிய விடயம்.

“முஸ்லிம் காங்கிரஸ் அமோக வெற்‌றியீட்டிய சபைகளில் எங்களுக்கு தவிசாளர் பதவி தரவேண்டிய நிலையில், எங்களைப் புறந்தள்ளிவிட்டு, மாற்று அணிகளுடன் கூட்டுச் சேர்வதாக இருந்தால் அதற்கு அரசியல் ரீதியாக நாங்கள் தகுந்த பதிலடியை கொடுப்பதற்கும் தயங்கமாட்டோம்.

“இயலுமானவரை இந்த ஆட்சியில் ஒற்றுமையுடன் பயணிப்பது என்ற நோக்கத்தில் இருந்தாலும், எங்களை பலவீனப்படுத்திக்கொண்டு பயணிக்க முடியாது” என்றார்.

10 comments:

 1. இந்தப் புத்தியத்தான் மந்த சீ மந்திப்புத்தி என்கிறார்ளாே.?

  ReplyDelete
 2. Muslim congress only has started the recism in the past.therfor entire community facing present problem.everything made by SLMC

  ReplyDelete
 3. தலைவர் அஷ்ரப் சொன்னதை ஒழுங்காக கடைப்பிடித்து வந்தால் இந்த நிலைமை ஏட்பட்டிருக்காது .இனி வரும் காலங்களில் முஸ்லிம்கட்சிகளுக்கு எந்த கௌரவமும் இருக்கப்போவதில்லை .இதட்கு பிரதான காரணமாக ஹக்கீம் அவர்களே காணப்படுகின்றார் .

  ReplyDelete
 4. என்ன தல... டீல் பெரிசோ?

  ReplyDelete
 5. தொப்பி புரட்டுவதாலா தலைவர் தொப்பியோடு இருக்கிறார்?

  ReplyDelete
 6. SLMC became the laughingstock of the century
  Ha ha haaaaa

  ReplyDelete
 7. மர்ஹும் அன்று கூறிவிட்டுச்"சென்றது பொய்யல்ல.ரனில் ஐ.தே.கட்சியிள் Driver ஆக இரு்க்கும் வரைக்கும் அக்கடசியிள் பின்னள் போக வேண்டாாாாாம் என்று
  போதுமாாாாாா ?

  ReplyDelete
 8. sana, you are a foolish??????

  ReplyDelete
 9. ஹக்கீம் அவர்களே, கிந்தோட்டையில், கண்டியில் நடந்தவிடயங்கள் உங்களுக்கு காரணமாக தெரியவில்லை. இந்த நாட்டில் இனவாதிகள் சுதந்திரமாக அவர்களது இனவாதத்தையும் வன்முறை நடவெடிக்கைகளும் உங்களுக்கு காரணமாக தெரியவில்லை. சிங்கள துவேஷ போலீசும், சிங்கள துவேஷ பாதுகாப்பு படையும் இந்த நாட்டில் இருப்பது உங்களுக்கு காரணமாக தெரியவில்லை. அதிரடி படையினரால் மெளலவிமார் தாக்கப்பட்டது உங்களுக்கு காரணமாக தெரியவில்லை. நிட்சயமாக உங்களுக்கும் உங்களது கூஜா தூக்கிகளுக்கும் சூடு சொரணையா கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். ஆக நீங்கள் தற்போது கூறும் விடயமும் நடக்கப்போகின்ற காரியமாகவே நாங்கள் பார்க்கவில்லை. மேலே ஒரு நண்பர் கூறிய விடயம் மாதிரி ஒரு டீல் நகர்வுதான் இது.

  ReplyDelete
 10. ஹக்கீம் அவர்களே, கிந்தோட்டையில், கண்டியில் நடந்தவிடயங்கள் உங்களுக்கு காரணமாக தெரியவில்லை. இந்த நாட்டில் இனவாதிகள் சுதந்திரமாக அவர்களது இனவாதத்தையும் வன்முறை நடவெடிக்கைகளும் உங்களுக்கு காரணமாக தெரியவில்லை. சிங்கள துவேஷ போலீசும், சிங்கள துவேஷ பாதுகாப்பு படையும் இந்த நாட்டில் இருப்பது உங்களுக்கு காரணமாக தெரியவில்லை. அதிரடி படையினரால் மெளலவிமார் தாக்கப்பட்டது உங்களுக்கு காரணமாக தெரியவில்லை. நிட்சயமாக உங்களுக்கும் உங்களது கூஜா தூக்கிகளுக்கும் சூடு சொரணையா கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். ஆக நீங்கள் தற்போது கூறும் விடயமும் நடக்கப்போகின்ற காரியமாகவே நாங்கள் பார்க்கவில்லை. மேலே ஒரு நண்பர் கூறிய விடயம் மாதிரி ஒரு டீல் நகர்வுதான் இது.

  ReplyDelete

Powered by Blogger.